Home > அரசியல், சாதியம் > யார் இந்த அம்பேத்கர்?

யார் இந்த அம்பேத்கர்?


ஏப்ரல் 14 – ஏன் விடுமுறை?
காரணம் நிறைய பேருக்கு தெரிவதில்லை. கடந்த ஆண்டுகள் வரை தமிழ் வருடப்பிறப்பு என்பதால் தான் ஏப்ரல் 14 அன்று விடுமுறை என்றே பலர் நினைத்திருந்தனர். ஆனால் தமிழ் வருடப்பிறப்பின் நாளாக தை 1ம் தேதியாக மாற்றப்பட்டப்பின் இனியாவது, டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஐ தான் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது என்ற விடயம் தெரியும் என்று பார்த்தால் அதுவும் பலருக்கு தெரிவதில்லை. அப்படி அவரை நினைவு வைத்துக்கொள்ள அவரைப்பற்றி பேச அவர் என்ன மகாத்மாவா?
யார் இந்த அம்பேத்கர்?
உலகிலேயே பயங்கரமான
உயிர்கொல்லி நோய் எயிட்ஸாம்!
அதில் இந்தியாவுக்கு முதலிடமாம்!
அதை விட கொடிய நோய் ஒன்றுண்டு
பல நேரங்களில் மனித ஓநாய்கள்
மனித இரத்தத்தை குடிக்கும் நோய்
சாதி எனும் கொடிய நோய்!
தன் இரத்தம் சிந்தி மனிதனை கழுவிய
கிறித்தவத்திலும் சாதி!
இனி எந்த கர்த்தரும் இரத்தம் சிந்தப்போவதில்லை எங்கள்
வன்னிய கிறித்தவனுக்கும், நாடார் கிறித்தவனுக்கும், தேவர் கிறித்தவனுக்கும்
ஒட்டியுள்ள சாதியை கழுவி விட…
இரத்தம்.. இரத்தம்.. 
ஆரம்பத்திலிருந்தே இதென்ன அமங்கலம் என்கிறாயா?
அமங்கலத்தையே அன்னாடம் வாழ்க்கையாய்
சுடுகாட்டில் பிணம் எரிந்தால்தான் வீட்டில்
சோறுக்கு விறகெரியும்
பிணம் எரிக்கும் பறைய‘ன்’ தெரியுமா உனக்கு?
பிணம் எரிப்பதா?? ச்சீ.. இதென்ன கவுச்சி என்கிறாயா?
கவுச்சி வாடையையே ஆடையாய்
ஆண்டாண்டு காலமாய் அணிந்திருக்கும்
மலம் அள்ளும் சக்கிலிய‘ன்’ தெரியுமா உனக்கு?
மலமா…. Dirty words … என்கிறாயா?
உடம்பு நாத்தம் தெரியாகூடாதுன்னு செண்ட் அடிச்சு சுத்துறோம்
நாளுநாள் நாத்தம் புடிச்ச துணிய வெளுப்பதே
வேலையாய் செய்யும் வண்ணா‘னை’ தெரியுமா உனக்கு?
அது அவங்க வேளைங்கிறியா?
கூலிய உசத்தி கேட்டாக்க நாக்குமேல
பல்லு போட்டு சக மனுசன பள்ள‘ன்’ னு பேசுறது தெரியுமா உனக்கு?
பிறப்பால் இவன் பள்ளன், பறையன், சக்கிலியன், வண்ணான் என்ற பாகுபாடு!
இந்த அ‘ன்’ னெல்லாம் வகுத்துக்கொடுத்த மனுவையும், 
சதுர்வர்ணத்தை படைத்த எல்லா வல்ல அவனையும்
அம்மணமாக்கி வேதங்களை அம்பலப்படுத்தி
கரும்புள்ளி செம்புள்ளி குத்தாக் குறையாக
பிறப்பால் அனைவரும் சமமென்றும்
அனைவரும் மனிதர்களென்றும்
தன் கருத்துக்களால் நெற்றியில் பிறந்தவர்களுக்கு(?)
மண்டையிலேயே சூடு போட்டு அனுப்பியவர்!
இந்து மதத்தை கேள்விகளால் இடித்துரைத்து
அதன் வேளிகளை வெட்டியெறிந்தவர்!
விலங்குகளாய் விலங்கிடப்பட்டிருந்த கோடானுகோடி
மக்களின் விடுதலைக்காக அரும்பாடுப்பட்டவர்!
அவர் தான் டாக்டர் அம்பேத்கர்..

தொடர்புடைய இடுகைகள்
Advertisements
 1. உண்மை
  14/04/2011 at 10:44 AM

  நன்றாக இருக்கிறது தோழர் ஆனால், ஆங்காங்கே எழுத்துப்பிழைகளும் வாக்கிய அமைப்பு சீரற்றும் இருக்கிறது எனவே, ஒரு முறைக்கு இரு முறை திருத்திய பிறகு வெளியிடவும்.

  நன்றி !

 2. உண்மை
  • 14/04/2011 at 8:30 PM

   நன்றி தோழர்! நேற்று, அவசரமாக பதிவிட வேண்டியிருந்ததால் பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். குறிப்பாக சுட்டிக்காட்டினால் எழுத்துப்பிழைகளும் வாக்கிய அமைப்புகளும் திருத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.

   நீங்கள் கொடுத்த சுட்டியை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது; இந்து நயவஞ்சகத்தனமும் புரிந்தது. சாதியின் மூலவேரே இந்துமதம். அதனால் தான் அம்பேத்கர் இந்து மதத்தை எதிர்த்தார். ஆனால் இந்துத்துவ வாதிகள் அவர் பெயர் அவர்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.

   அதற்கு மறுப்பாக இந்து மதம் பற்றியும் எழுதலாம். தெரியப்படுத்தியதற்கு நன்றி!

 3. Aravindan
  14/04/2011 at 5:44 PM

  I also dont know the birthday of Amebedkar..am shame..the youth like me they are praising,remembering the birthday of stars like Rajini,kamal etc., even they didn do anyhting useful for the society nor changed the society.More than Million people love rajni with this if he is he can change the society to a healthy one..instead he is becoming wealthy…and people becoming dirty…ever…am the one also ashame of this youth gen..as am the one…Everyone need not to create a revolution when something wrong had happened in the society atleas jus need to think the great leaders like ambedkar etc.,one day this thought wil induce fire that will burn these stupid politicians..nice article…Expecting more article..Good work…

  • 14/04/2011 at 8:38 PM

   உங்களை போன்ற சில இளைஞர்களை தவிர பெரும்பான்மையான இளைஞர்கள் இரண்டு போதைகளில் மூழ்கியுள்ளனர்.

   1. சினிமா, 2. கிரிக்கெட்.

   அதிலிருந்து வெளியே வந்து சமூகத்தை பற்றி சிந்தித்து பார்ப்பதில்லை. உங்களை போன்று இன்னும் பலர் சிந்திக்க வேண்டும்.
   உங்கள் சமூகம் சார்ந்த கருத்துக்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அதுவே ஒரு பிரச்சாரம் தான்.

   நன்றி!

 4. 23/04/2011 at 5:02 PM

  விடுதலை சீ.காரர்கள்தான் ஒலிபெருக்கி வைத்து தெரியபடுத்துவார்கள்.இந்த தடவை
  தேர்தல்ஜோலில்ல அம்பேத்கரை மறந்துட்டாங்க.

 5. Aarvaalan
  22/05/2011 at 2:31 AM

  i would like to go with your view …
  Sharing a link that discuss about few faulty historical facts registered in Ambedkar movie and related article about Gandhi/Congress and Ambedkar.Facts are discussed with proofs

  http://www.jeyamohan.in/?p=10718

  Director should not be biased when he brings out a movie about Iconic social reformer. Read and let me know your thoughts

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: