7ம் அறிவு – ஆறறிவை மழுங்கடிக்கிறது!


7ம் அறிவு படம் வெளிவருவதற்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்டது (அப்படியொரு பரபரப்பை ஏற்படுத்தினால் தானே கல்லா கட்ட முடியும்). படம் வெளிவருவதற்கு முன்பே படத்தைப் பற்றி முருகதாஸ் பெருமையாக பேசியதை விட, தமிழனின் பெருமையை உலகுக்கு காட்டவருகிறார் முருகதாஸ் என்று தமிழ் தேசியவாதிகள் அதிகமாக பேசினார்கள்; எதிர்பார்த்தார்கள். ஆனால் படம் பார்த்தப்பிறகு தான் தெரிந்தது இந்தப்படம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் முகத்தில் சாணியை பூசியுள்ளது என்று. இருந்தாலும், பூசியது பசுமாட்டு சாணம் தான். அது நமக்கு நாறாது. பசுமாட்டு சாணத்தை வீடுகளில் பூசுவது ஐதிகம் தான். அதனால் இது பெரிய தவறில்லை என்கின்றனர் சில தமிழ் தேசியவாதிகள்.

சரி. படம் என்னதான் சொல்கிறது? படம் நம் வரலாற்றை திரும்பிப்பார்த்து தமிழனின் பெருமையை தெரிந்து நம் கலாச்சாரத்தை மீட்டுருவாக்கம் செய்ய சொல்கிறது.  “நம் பெருமை தெரியாததனால் தான் நம்மை மலேசியாவில் இலங்கையில் அடிக்கிறான்” என்று பஞ்ச் டையலாக் பேசி படம் பார்க்கும் தமிழனை முருக்கேற்றுகிறது.

தமிழனை முருக்கேற்றுவதிலும் தமிழ் பண்பாட்டையும் சொல்வதிலும் நமக்கு பிரச்சனையில்லை. ஆனால் தமிழ் பண்பாடு என்றும் தமிழர் பண்பாடு என்றும் எவனுடைய பாரம்பரியத்தை போதிக்கிறது என்பதில் தான் இங்கே பிரச்சனை.

‘போதி தர்மன்’ என்ற தமிழனின் பெருமையை போதிக்கும் சாக்கில் இந்தப்படம் இடஒதுக்கீடு, மதமாற்றம் என்பதை எதிர்த்து பார்ப்பனிய சடங்குகளை ’தமிழர் பண்பாடு’ என்று போதிக்கிறது. இந்த படம் இடஒதுக்கீடு எதிர்ப்பை சொல்கிறது, மூடநம்பிக்கையை பரப்புகிறது, மதமாற்றத்தை குறைசொல்கிறது என்று குறைகளை தனித்தனியாக பிரித்துப்பார்த்து, இது தவறு, இது இது தவறு என்று மார்க் போடுகிறார்கள் சிலர். அது இல்லையென்றால் படம் சூப்பராக இருக்கும் என்றும் சொல்கிறார்கள். இன்றைய தமிழ் பண்பாட்டின் சீரழிவு பற்றிய சரியான பார்வையில்லாததால் ஏற்படுகிற குறைபாடுகள் இவை. தமிழர் பண்பாடு என்னும் பொதுக்கண்ணோட்டத்தில் யார் படம் எடுத்திருந்தாலும் இப்படித்தான் எடுத்திருப்பார்கள். அதைத்தான் முருகதாசும் செய்திருக்கிறார்.  ஏனெனில் இன்றையை தமிழர் பண்பாடு என்பதே தமிழ் + பார்ப்பனீய பண்பாடாகத்தான் இருக்கிறது. நல்லநேரம் பார்த்து தான் வெளியில் செல்ல வேண்டும்; நல்லது கெட்டது நடத்த வேண்டும். முகூர்த்தநாளில் தான் திருமணம் செய்யவேண்டும் இவைகளெல்லாம் மூடநம்பிக்கையென்று நாம் சொன்னால் உடனே வீட்டில் உள்ள பெரியவர்கள் இதெல்லாம் தமிழர்களின் ஐதீகம் தமிழர் பண்பாடு. இதை நாம் கடைப்பிடிக்கவேண்டும் என்று தமிழ் பெருமையை நமக்கு அடுக்குவார்கள்.  இப்படித்தான் ஒருவனுக்கு சிறுவயதில் இருந்தே தமிழர்களுக்கு பண்பாடு என்று சைவ வைணவ பழக்கவழக்கங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதில் வைணவ எதிர்ப்பாளர்களான சைவ பிள்ளைமார்கள் தமிழ் சைவத்துக்குத்தான் சொந்தம். சைவம் தான் தமிழுக்கு காப்பிரைட்ஸ் என்று தமிழையும் சைவத்தையும் மிக்ஸ் பண்ணி போதிப்பார்கள். நடிகர் சிவக்குமார் போன்றோர் பேசும் தமிழ் பெருமை இந்த வகையறாவை சார்ந்ததே. தமிழர் திருமணம் என்று செய்யும் பலர் சமஸ்கிரத ஸ்லோகங்களுக்கு பதிலாக தமிழில் தேவாரம், திருவாசகம் பாடி தாலி கட்டி திருமணம் செய்வதை இதனோடு பொருத்திப்பார்க்கலாம். உண்மையில் அது தமிழ் திருமணம் அல்ல; சைவத்திருமணம்.

சோழர்களின் திறமையை பேசும் கட்டிடகலையும், பல்லவர்களின் திறமையை பேசும் சிற்பக்கலையும் எதை போதிக்கின்றன? தமிழனின் பெருமையையா? அல்லது பார்ப்பனீயத்தின் பெருமையையா? தமிழன் பாரம்பரியம் என்று பார்ப்பனீய பெருமை தானே பேசுகிறது. அதேபோலத்தான் இந்தப்படமும் தமிழன் பாரம்பரியம் துளசி செடி, மஞ்சள், சாணி என்று பார்ப்பனீய பெருமை பேசுகிறது.

கி.பி. 6ம் நூற்றாண்டுகளுக்கு பிறகு தமிழை பார்ப்பனீயம் விழுங்கி அது கழித்த மலம் தான் இன்று தமிழரின் பழக்கவழக்கங்களாக ‘தமிழர் பண்பாடு’ என்னும் பேக்கேஜில் கொடுக்கப்படுகிறது.  முருகதாஸ் இந்த பேக்கேஜ் செய்யப்பட்ட தமிழர் பண்பாட்டை காட்டும்போது மலத்தில் உள்ள நாற்றம் (இடஒதுக்கீடு எதிர்ப்பு, மதமாற்றம் எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஆதரவு) இயல்பாய் எழுகிறது. அந்த நாற்றம் தான் குறிப்பாக தெரிகிறதே தவிர, தமிழர் பண்பாடே பார்ப்பனீயத்தின் மலமாக இருக்கிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம். மறக்கடிக்கப்பட்டோம்.

ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக்கட்டத்தில் (கி.பி. 6ம் நூற்றாண்டுகளுக்கு பிறகு) இந்துத்துவா அல்லது பார்ப்பனீய பழக்கவழக்கங்கள் தான் பண்பாடு என்னும் பெயரில் தமிழர் பண்பாடாக விதைக்கப்பட்டது. இன்று அது மரமாக வேரூன்றி நின்றுகொண்டிருக்கிறது. இந்த தமிழர் பண்பாட்டைத்தான் முருகதாசும் மீட்டுருவாக்கம் செய்யவேண்டும் என்று நமக்கு போதிக்கிறார்.

மூவேந்தர்களின் பெருமையை பேசுபவர்கள் பேச்சில் பார்ப்பனீயம் வெளிப்படையாக தெரிவதை பார்க்கலாம். பார்ப்பனீயத்தை தூக்கிப்பிடித்தது அவர்களுக்கு தமிழர் பெருமை. முருகதாசும் இந்த வகையறா என்பதை லென்ஸ் வைத்து பார்த்து கண்டுபிடிக்கத் தேவையில்லை. முருகதாசிடம் புத்தர் யார் என்று கேட்டால் கூட, விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் தானே புத்தர் என்று புத்திசாலித்தனமாக பதில் சொன்னாலும் சொல்வார். இது தான் முருகதாசின் வரலாற்று அறிவு. அதுக்கு ஏழாம் அறிவுன்னு பேரு வேற!

முருகதாஸ் மூவேந்தர்களையோ பல்லவர்களையோ பெருமையாக பேசாமல் ’போதி தர்மன்’ என்னும் புத்த சமயத்தை தழுவியவரை மையமாக காட்டுகிறார். முருகதாசுக்கு ’போதி தர்மன்’ என்னும் பெயர் அவர் தமிழன் என்பதால் தேவைப்பட்டதே தவிர போதி தர்மன் காலத்தில் இருந்த அவைதிக போதனைகளோ அப்போது கடைப்பிடிக்கப்பட்ட பண்பாடோ தேவைப்படவில்லை. அவருக்கு தேவைப்பட்டது ஒரு தமிழ் பெயர். போதிக்கவேண்டியது தமிழன் என்னும் உணர்வு. ஆனால் தமிழன் என்ற கருத்து காயடிக்கப்பட்டு பார்ப்பனீய பெருமையும் பார்ப்பனீய பண்பாடும் இருப்பதால் நமக்கும் அதுவே போதிக்கப்படுகிறது.

இதில் நகைமுரண் என்னவென்றால் வைதிக மதங்களை எதிர்த்த பௌத்தத்தை தழுவிய போதிதர்மரை வைத்தே வைதிக கருத்துக்களை படம் மூலம் பரப்புவது தான். படத்தில் போதி தர்மனை வைத்து சேம் சைட் கோல் போடுகிறார் இயக்குனர்!

படத்தில் பயணிப்போம்

படத்தில் தமிழனின் பெருமையை நிலைநாட்ட எடுத்துக்கொண்ட மையக்கதாப்பாத்திரம் ’போதிதர்மன்’. படத்தில் காட்டக்கூடிய கி.பி. 5ம் நூற்றாண்டில் பல்லவர்கள் ஆண்ட காஞ்சியிலிருந்து போதி தர்மர் சீனாவுக்கு கிளம்புகிறார். அதே காலகட்டத்தில் தமிழகத்தில் என்ன சூழல் நிலவியது என்பதை சொல்லாமல் சீனாவுக்கு பயணிக்கிறது படம். சீனா என்றவுடன் ஒரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது. அக்காலத்தில் ‘சீனா’ என்பது தமிழர்களால் சீனா என்று அழைக்கப்படவில்லை. ‘சயாம்’ என்றே அழைக்கப்பட்டது. படத்தில் போதிதர்மன் “சீனத்துக்கு செல்கிறேன்” என்று அழகாக(!) கூறுவார். சீனா சயாம் என்று அழைக்கப்பட்டது என்கிற சின்ன விடயத்தைக்கூட தெரிந்துகொள்ள மெனகெடாமல் படம் எடுத்திருக்கிறார் தமிழன் வரலாற்றை போதிக்க வந்த முருகதாஸ்.

சீனாவுக்கு கூட, போதிதர்மன் வெறும் வைத்தியத்தையும்  குங்குஃபூ கலையையும் கற்றுக்கொடுக்க போவது போல காட்டுகிறார் முருகதாஸ். ஆனால் உண்மையென்னவென்றால், நாடு விட்டு நாடு பயணிப்பவர்கள் ஒன்று வணிகத்துக்காக செல்பவர்களாக இருப்பார்கள் அல்லது மதத்தை பரப்ப செல்பவர்களாக இருப்பார்கள். போதிதர்மனின் பவுத்த பிண்ணனியை பார்த்தால் அவர் சீனாவுக்கு பவுத்தத்தை போதிக்கத்தான் சென்றிருப்பார். சென்ற இடத்தில் வைத்தியம் தற்காப்பு கலையென்று தேவைப்பட்டபோது போதித்துள்ளார். அவர் போதித்த பவுத்தத்தையும் அவர் காலத்தில் தமிழகத்தில் நிலவிய சூழலையும் படமெடுத்திருந்தால் புற்றிலிருந்து ஈசல்கள் வெளிவருவது போல பல உண்மைகளும் வெளிவந்திருக்கும்.

அந்த வரலாற்றை சுருக்கமாக தெரிந்துகொண்டால் தான் இன்றைய தமிழ் பண்பாட்டையும் இந்தப்படத்தையும் புரிந்துகொள்ளமுடியும்.

தமிழ்ச் சூழலின் வரலாற்றுச் சுருக்கம்

கி.பி. 3ம் நூற்றாண்டு முதல் கி.பி. 6ம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர்கள். அந்த காலத்தை தான் இந்துச்சமூகம் ’இருண்ட காலம்’ என்று புறக்கையால் ஒதுக்குகிறது.

அவைதிக மதங்களான சமணமும் பவுத்தமும் போதிக்கப்பட்ட களப்பிரர்கள் காலத்தில் பல முற்ப்போக்கான நிகழ்ச்சிகள் நடந்தேறின. பார்ப்பனர்களுக்கு மூவேந்தர்களால் பிரம்மதேயங்களாக வழங்கப்பட்ட கிராமங்களும், தானங்களாக கொடுக்கப்பட்ட நிலங்களும் பறிக்கப்பட்டன. பறிக்கப்பட்டவைகள் மக்களுக்கு பொதுமைப்படுத்தப்பட்டன. கோவில்களை பள்ளிக்கூடங்களாக மாற்றி சிறுவர்களுக்கு வர்ணபேதம் பார்க்காமல் கல்வியறிவு கொடுக்கப்பட்டது. ’பள்ளி’ என்ற சொல்லே இந்த காலத்தில் உருவானதுதான். குடிபெருமை பேசித் தங்களுக்குள் வேறுபட்டு கிடந்த தமிழ் சமூகத்தை ஒருங்கிணைக்கும் பணியை சமணமும் பவுத்தமும் செய்தன. இந்த காலகட்டங்களில் தான் தமிழுக்கு சிறப்பூட்டிய திருக்குறள், பதினெண்கீழ் கணக்கு போன்ற அறநூல்களும், சிலப்பதிகாரம், பெருங்கதை, சிந்தாமணி போன்ற காப்பியங்களும் படைக்கப்பட்டன. பழங்குடிகளையும் கல்வியாளர்களையும், வணிகர்களையும் தங்கள் மதத்தவர்களாக சமணமும் பவுத்தமும் ஆக்கிக்கொண்டன. பவுத்த மதம் என்பது தர்க்கவியலை அடிப்படையாக கொண்டிருந்ததால் (எதனையும் அறிவியல் கண்கொண்டு பார்ப்பது அதன் இயல்பாக அமைந்துவிட்டது) வைதிக பார்ப்பனீயத்தால் சமாளிக்க முடியாமல் கடும் எதிரியானது.  வைதிகமான பார்ப்பனீயம் அவைதிக மதக்கோட்பாடுகளால் ஆட்டம் கண்டது. இப்படிப்பட்ட களப்பிரர்களின்  ஆட்சியை கி.பி. 6ம் நூற்றாண்டில் முடிவுக்கு கொண்டுவந்தது தொண்டைநாட்டு அரசனான பல்லவ சிம்மவிஷ்ணுவும், பாண்டியன் கடுங்கோனும்.

தமிழ் சமூகத்தை பார்ப்பனீயமயப்படுத்திய காலம்

களப்பிரர்கள் ஆட்சி முடிவுக்கும் பின் தமிழ்நாட்டில் பார்ப்பனீயம் வலுவிழந்து கிடந்ததால் பார்ப்பனீயத்தை தூக்கி நிமிர்த்தும் பணியை பல்லவர்கள் செவ்வனே செய்தார்கள். இந்து மதத்தை பரப்ப கண்ட கண்ட பாறைகளிலெல்லாம் இந்து கடவுள்களை செதுக்கினார்கள். அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று தான் மாமல்லபுரம். அது ஏதோ சிற்பக்கலையை மேம்படுத்தும் நோக்கில் செதுக்கப்பட்டதல்ல. பக்தியை பரப்பும் நோக்கில் செதுக்கப்பட்டவை.

மக்களிடையே மங்கியிருந்த பக்தியை உசுப்பிவிட சைவமும் வைணமும் கூட்டுச்சேர்ந்தன. வைதிக மதம் அவைதிக மதங்களுடன் போராடுவதற்கு வியூகங்களை வகுத்தது. இதற்கான ஆயுதமாக வைதிகமும் சைவமும் முதலில் மொழியை தேர்வு செய்தது. அது நாள்  வரையில் மொழி வேறு, கடவுள் வேறு என்று இருந்ததை மாற்றி ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழையும் கடவுளையும் இரண்டற கலந்து தமிழும் கடவுளும் ஒன்றென சொல்லி  ‘தெய்வத்தமிழ்’ என்று கற்பிக்கப்பட்டது. இதனால் சாதாரணமாக இருந்த தமிழ் உணர்வு தெய்வ உணர்வாக மாறியது. அது தான் ‘பக்தி இயக்கமாக’ பரிணமித்தது. இருந்தாலும் பெரும்பாலான பழங்குடியினர் பின்பற்றியதும், தமிழுக்கு பெரும் பங்காற்றியதுமான அவைதிக மதங்களை அழிக்க அவ்வளவு சுலபத்தில் முடியவில்லை. இரண்டு மூன்று நூற்றாண்டுகள் இப்போராட்டம் நீடித்தது.

இராமணயத்தையும், மகாபாரதத்தையும் தெருக்கூத்துக்கள் மூலம் தொடர்ந்து மக்கள் மொழியின் வாயிலாக பரப்பியும், புராணக்கதைகள்,  பகவத்கீதை, மனுநீதி போன்றவைகளை கதாகாலச்சேபம் வாயிலாக மக்களிடையே பரப்பியும் பார்ப்பனரையும் பார்ப்பனீயத்தையும் மக்களை ஏற்க வைத்தனர். திருமூலரின் திருமந்திரம், அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோரின் தேவாரப்பாடல்கள், திவ்வியபிரபந்த பாடல்கள் போன்றவை மொழிப் பெருமைகளாகவும், அதே நேரத்தில் பார்ப்பனீய கருத்துக்களை திணிக்கவும் பயன்பட்டன. இப்படித்தான் அன்று தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் தமிழ் + பக்தி என்னும் கூட்டு கருவியால் தமிழ் பார்ப்பனீயமயமானது. அன்று தொடங்கி வைத்த தமிழ் + பார்ப்பனீய பண்பாடு  இன்றும் தொடர்கிறது.

அதனால் பலரும் தமிழ் பண்பாட்டையும் பார்ப்பனீயப்பண்பாட்டையும் சேர்த்து குழப்பி முருகதாஸ் மாதிரி மென்டலாக பலர் சுத்துகிறார்கள். தனியாக சுத்தினால் பரவாயில்லை. அது அவ்வளவு ஆபத்தில்லை. ஆனால் அதையே மக்களுக்கும் பிலிம் போட்டு போதிக்க துவங்கிவிடுகின்றனர் இந்த மூளையற்ற முருகதாசுகள்! அது தான் மிகவும் ஆபத்தாக இருக்கிறது.

தமிழினமே பெருமைபட வேண்டும் என்று கதையின் மையகதாப்பாத்திரமாக ‘போதிதர்மன்’ காட்டப்படுகிறார். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தின் தமிழர்களின் பண்பாட்டை நமது பாரம்பரியமாக கூறாமல் ’போதிதர்மன்’ கூட்டத்தை அழித்த பார்ப்பனீயத்தின் பண்பாட்டை தமிழனின் பாரம்பரியமாக கூறுகிறது படம்.

வீரத்துக்கும் திறமைக்கும் போதிதர்மன்! கலாச்சார பாரம்பரியத்துக்கு பார்ப்பனீயம்!

இது தான் முருகதாஸ் 7ம் அறிவு படத்தில் காட்டும் வண்ணக்கலவை.

படம் என்னும் பெயரில் அபத்தம்

முருகதாசுக்கு வரலாறு தான் தெரியவில்லை. நோக்கு வர்மத்துக்கும், பேய் பிடிக்கிறதுக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது. நோக்கு வர்மம், மரபணு மாற்றுவது, பேய் பிடிப்பது இதையெல்லாம் ஒன்னுன்னு நெனைச்சு குழைச்சு படம் பார்ப்பவரை பைத்தியக்காரனாக மாற்றுகிறார் இயக்குனர்.

மரபணு பொருத்தினால் பழைய நபர் திரும்பி வந்துவிடுவாராம்.

மரபணு மாற்றி பொருத்துவதற்கும் பேய்பிடிப்பதற்கும் வித்தியாசம் தெரியாமல்…. போய்யா உன் புத்தியில பல்லி மூத்திரம் பேய.. படம் பார்ப்பவன் எதுவும் சொல்லமாட்டான்னா என்னவேண்டுமானாலும் படமாக எடுப்பதா?

மரபணுவின் செயல் என்பது உடற்கூறுவியலில் தான் இருக்குமே தவிர மனித எண்ணங்களில் அல்ல. அதாவது மரபணு தொடர்ச்சி என்பது பௌதிக ரீதியானது, மன ரீதியானது அல்ல. உதாரணமாக ஆரோக்கியமான நபருக்கு ஆரோக்கியமான வாரிசு பிறக்கும். ஆனால் ஆரோக்கியமான நபர் கராத்தேயில் நிபுணர் என்றால் அதே கலை தானாக அந்த வாரிசுக்கும் வராது (அந்த வாரிசு அந்தக்கலையை கற்றுக்கொள்ளாதவரை). படத்தில் போதிதர்மனுடைய மரபணு பொருத்தியதும் போதி தர்மன் பயின்ற களரி இவருக்கும் வந்துவிடுகிறாம்!

கருத்தியல் ரீதியாக படம் பார்ப்பனீயம் போதிக்கிறது – இது தமிழர் பற்றிய வரலாற்றுக்குறைப்பாடு

மரபணு மாற்றத்தால் எண்ணங்கள் தொடராது – இது அறிவியல் குறைபாடு

நோக்கு வர்மம் என்பது (தற்காப்புகலை நிபுணர்களே சொல்வது போல) அது நினைவிழக்க செய்வது தானே தவிர நாம் நினைக்கும் வேலையை செய்யவைப்பதல்ல – தற்காப்பு கலைக்கும் பேய்பிடிப்பதற்கும் வித்தியாசம் தெரியாத யதார்த்தக் குறைபாடு.

இந்த அழகில் படத்தை எடுத்துட்டு படத்துக்கு 7ம் அறிவுன்னு பேரு!

எவ்வளவு குறைகள் படத்தில் இருந்தாலும் படத்தின் கடைசியில் இடம் பெரும் தமிழ் பற்று வசனங்கள் ஆகியவை ரெட் ஜெயிண்ட்டால் போடப்போடும் மூலதனத்தை பாதுகாத்துவிடும் என்று முருகதாஸ் நினைத்திருக்கலாம். அவர் நம்பிக்கையை வீணடிக்காமல் சில தமிழ் தேசியவாதிகள் படத்தை புகழவும் செய்கிறார்கள்.

7ம் அறிவு படம் தமிழனுக்கு இனப்பெருமையை போதிக்கிறது என்று 6 அறிவுள்ள மனிதனால் நிச்சயம் பாராட்ட முடியாது. முற்போக்காளர்களால் நிச்சயம் பாராட்டவே முடியாது.

படம் சொல்வது போல் மக்களுக்கு தேவை துளசி செடி, மஞ்சள், சாணி என்ற சாக்கில் சொல்லப்படும் பார்ப்பனீய பண்பாடு அல்ல!

உழைக்கும் மக்களை பிளவுப்படுத்தி சுரண்டிக்கொழுக்கும் பார்ப்பனீயத்தை வேரோடு அழிக்கும் ’பாட்டாளி வர்க்க புரட்சிகர பண்பாடு’ தான் தேவை!

– சிந்தியுங்கள்!

தொடர்புடைய இடுகைகள்

‘கோ’ – விஷம் ஏற்றும் ஊசி

‘அவன் – இவன்’ திரைப்படம் ஒரு பார்வை!

‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ திரைப்படமும் சமூக அவலமும்..

Advertisements

பரமக்குடியில் துப்பாக்கிகள் சொல்லும் பாடம்!

பரமக்குடியில் காவல் துறை 9 பேரை சுட்டுக் கொன்றுள்ளது.  ஆதிக்கசாதிவெறியனை எதிர்த்து போராடிய மாவீரனும் படுகொலை. மாவீரனுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றவர்களும் படுகொலை.

சாதிவெறியன் முத்துராமலிங்க குருபூஜை அன்று சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள் விடுமுறையென அரசே விழாவை நடத்துகிறது. அப்போது தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைகளுக்கு அளவே இருக்காது. போகும் வழியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடிசைகளுக்கு தீ வைப்பது சர்வ சாதாரண விடயம். அப்போதெல்லாம் காவல் துறை என்ன செய்யும்? கையில் கிலுகிலுப்பும், வாயில் பால் பாட்டிலும் தான் வைத்திருக்கும். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் கூட்டமாக அணிதிரள்கிறார்கள் என்றால் பொருத்துக்கொள்ளாது அரசும், அரசின் ஏவல் நாய்களான காவல் துறையும். ஏதாவது காரணம் சொல்லி ஒடுக்குவது. அதையும் மீறினால் துப்பாக்கி சூடுதான். மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் இல்லாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பதை இங்கு கவனிக்கப்படவேண்டும். ஏனெனில் இந்த கூட்டத்தை சுட்டால் அரசு கேள்வி கேட்காது. மாறாக விருதுகள் தான் தரும் என்பது காவல்துறைக்கு நன்றாகத் தெரியும் அரசின் எண்ணமும் காவல் துறையின் எண்ணமும் வேறுவேறல்ல. அதனால் தான் அனுமதியே தேவையில்லாமல் சுட்டிருக்கிறது காவல்துறை.

இந்த படுகொலைகள் என்ன பாடம் போதிக்கின்றன? இனிமேல் எவரொருவரும் சாதிவெறிக்கெதிரான போராட்டத்தையோ அதைப்பற்றி பேசுவதையோ கனவில் கூட நினைக்கக்கூடாது என்பதைத்தவிர வேறென்ன?

1999ம் ஆண்டு மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேரின் இரத்ததை இதே காவல்துறை மண்ணில் உரமாக்கியது.

இந்த நிகழ்வுகளை வெறும் சிலர் வெறும்  ‘காவல்துறையின் வன்முறை’ என்றே சுருக்கிப்பார்க்கின்றனர். அதில் புதிய தமிழகமும், வி,சிக்களும் கூட அடக்கம்.

இதை அவர்களின் காவல்துறை மீதான கண்டனத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

பரமக்குடியின் படுகொலைகளுக்கு காவல் துறை மட்டும் செய்த வன்முறை தான் காரணம் என்றால், மேலவளவு முருகேசன் படுகொலைக்கு யார் காரணம்? கீழ்வெண்மணியில் 44 பேர் தீயில் வெந்ததற்கு யார் காரணம்? அந்த கோரப்படுகொலையை நிகழ்த்திய ஆதிக்க சாதிவெறியன்களை நிரபராதிகள் என்று தீர்ப்பு பெற்று அகந்தையுடன் வெளியே வந்தார்களே யார் காரணம்?

வன்முறை வடிவங்கள் மாறுகிறதே தவிர வன்முறை நிகழ்த்தும் படுகொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இங்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் மொழிவேறுபாடு இல்லாமல், இன வேறுபாடு இல்லாமல், சாதிவெறிக்கு ஒரே மாதிரி தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் வன்கொடுமைகளுக்கு ஆட்படுகின்றனர். இதன் பொருள் ஒட்டு மொத்த இந்தியாவிலும் பார்ப்பனீய வெறி புரையோடியுள்ளது பாகுபாடு பார்க்காமல்.

அதன் நீட்சியாகத்தான் இந்தியாவின் அரசு இயந்திரத்திலும் பார்ப்பனீயம் இரண்டற கலந்துள்ளது. அரசியலமைப்புச்சட்டங்கள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், காவல் துறை என்று அரசு இயந்திரத்தின் எல்லா கூறுகளிலும் பார்ப்பனீயத்தின் செல்வாக்கும் வெறியும் தொடர்கிறது. ஆக, வெறுமனே காவல்துறையின் வன்முறை என்று சுருக்கிப்பார்ப்பது இந்த சாதிவெறி பிடித்த சமூகத்தின் மற்ற பிற கூறுகளை மக்களின் பார்வையிலிருந்து தப்பிக்கவைத்துவிடும். இன்று ஜெயா ஒரு விசாரணை கமிசனை அமைப்பது செய்திகள் வந்தன அந்த விசாரணை கமிசன் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமையும். பார்ப்பனீய நீதியரசர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் அவர்களின் பார்ப்பனீயத்து ஆதரவான பணியை அரசு விடாமல் பெற்றுக்கொள்கிறது. அந்த கமிசன் என்ன தீர்ப்பு வழங்கும்? பொது சொத்தை காப்பாற்ற காவல்துறை நடவடிக்கை எடுத்தது என்று பாசிச ஜெயா வாந்தியெடுத்ததையே அந்த கமிசனும் வாந்தியெடுக்கலாம். ஜெயா வாயும், கமிசன் வாயும் வேறுவேன்றாலும் பார்ப்பனீய திமிர் ஒன்றுதானே!

தொடர்ச்சியான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் இருந்தால் மக்களை ஆசுவாசப்படுத்த மிஞ்சிப்போனால் ஒன்றிரண்டு காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யலாம். அதுவும் அத்திப்பூத்த நடவடிக்கைத்தான்.

இவ்வாறுதான் காவல்துறையும் நீதித்துறையும் செயல்படுகின்றன ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதமாக!

இந்தப்படுகொலைக்கு கண்டனம் கூட தெரிவிக்காத தமிழ் கொம்பன்கள் புது வியாக்கானம் கொடுக்கின்றனர். தமிழ் தேசிய சித்தாந்தப்படி சாதிமறந்து தமிழராய் ஒன்றிணையாதவரை சாதிக்கலவரங்கள் தொடரும் என்று ஆருடம் கூறுகின்றனர் அரசியலற்ற கோமாளித்தனமான இந்த வார்த்தைகளை சொல்பவர்களை பழைய செருப்பால் அடித்தாலும் நமக்கு ஆத்திரம் தீராது. அவர்களின் வாயில் மலத்தை கரைத்து ஊத்தினால் ஒருவேளை புத்தி வருமோ என்னமோ தெரியாது. ஒருபக்கம் ஈழத்தாய் அம்மா என்று முறையாக அறிவிக்கப்படாத அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளராகத் திகழும் சீமான் பரமக்குடி சம்பவம் குறித்து எதுவும் சொல்லவில்லையே இது தான் தமிழ்தேசியத்தின் இலட்சணம் என்று கேள்வியெழுப்பினால் அதற்கு தமிழ்தேசியவாதிகள் ஏன் எதற்கெடுத்தாலும் தமிழ் தேசியவாதிகளை குறை கூறுகிறீர்கள். திராவிட அரசியல் செய்பவர்கள் தான் இதற்கு காரணம் என்று திராவிடத்திடம் மடைமாற்றிவிடலாம். திராவிடம் மக்கள் மத்தியில் தோலுரிக்கப்பட்டு பல நாட்கள் ஆகின்றன. ஆனால் பழைய திராவிடத்தை தமிழ் தேசியம் என்று பெயர் மாற்றி பேசிவரும் வீர்ர்களை அடையாளம் காண்பதே தற்போதுள்ள முதன்மையான பணி. இவர்கள் திராவிடத்தை விமர்சிக்கும் அதே வேளையில் அண்ணா திராவிட முன்னேற்ற கட்சிக்கு மட்டும் சொம்படிப்பதை கவனிக்கவும்.

ஒடுக்கப்பட்டவனும் தமிழன் என்றால் அவனை ஒடுக்கும் ஆதிக்கசாதிவெறியை எதிர்த்து போராடுவதும் தமிழ்தேசியவாதிகளின் கடமைதானே! சாதிவெறியை கண்டிக்கக்கூட வக்கில்லாத உங்களிடம் தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழன் என்ற அடையாளத்தை வேண்டி கையேந்தி நிற்கவில்லை. அப்படி சமூகம் அவனையும் தமிழனாக பாவிப்பதுமில்லை. நோகாமல் நோன்பு பிடிப்பது போல தமிழ் தேசியம் சாத்தியப்பட அனைவருக்கும் நோகாமால் சாதிமறந்து ஒன்று சேர்வது மட்டும் தான் இதற்கான தீர்வு என்கிறது தமிழ்தேசியம். சாதிவெறி மறந்து ஒன்று சேருங்கள் என்று அடிப்பவனைப்பார்த்து கூறாமல் அடிவாங்குபவனை பார்த்து கூறும் உங்கள் தமிழ் தேசியம் எங்கள் மூத்திரத்துக்கு சமம்.

தமிழ் தேசியம் இப்படியிருக்கிறதே என்று தலித் அரசியல் தலைவர்களை பார்த்தால் வேதனையாக இருக்கிறது. சட்டமன்ற பேரவையிலிருந்து தான் கிருஷ்ணசாமியால் வெளியே வரமுடிகிறதே தவிர கூட்டணியிலிருந்து அல்ல! விடுதலைச் சிறுத்தைகளும் எதிர் கட்சி அரசியலுக்காகக்கூட இதை முன்னெடுக்கவில்லை. கண்டனத்துடன் நிறுத்திக்கொண்டனர். எங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் சம்மந்தமில்லை என்று ஜான் பாண்டியன் தரப்பு நிறுத்திக்கொண்டது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான கட்சியாக, நேர்மையாக அவர்களுக்காக போராட கட்சியாகத்தான் தலித் கட்சிகள் செயலற்று இருக்கின்றன. செ.கு தமிழரசன் கிருஷ்ணசாமி அதிமுகபக்கம் என்றால் வி,சி திமுக பக்கம். யாரும் தாழ்த்தப்பட்ட மக்கள் பக்கம் இருப்பதில்லை அவர்களுக்காக போராடுவதுமில்லை. தேர்தல் அரசியலில் ஓட்டுக்களாக ஓட்டு போட்டும் வாத்துக்கூட்டங்களாகத்தான் இதுவரை அவர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அரசியல் அதிகாரம் வென்றால் இதெல்லாம் சரியாகிவிடும் என்று தலித் கட்சிகள் சித்தாந்தம் பேசலாம். அதற்காக தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுக்களை அறுவடை செய்ய தலித் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய தயாராகலாம்.

அரசியல் அதிகாரம் என்பது என்ன? மாநிலத்தின் முதலமைச்சராக ஆவதா? அப்படி முதல்வர் பதவி கிடைத்தால் வன்கொடுமைகள் தடுக்கப்பட்டுவிடுமா? உ.பி.யில் இன்றும் தாழ்த்தப்பட்ட பெண் முதல்வராக இருந்தும் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீதான வன்கொடுமைகள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன.

அரசியல் அதிகாரம் என்பது தலித் இயக்கங்கள் சொல்லும் நாடாளுமன்ற அரசுப்பதவிகள் அல்ல. மாறாக இந்த அரசு இயந்திரத்தை மாற்றி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உழைக்கும் மக்களுக்கான நமக்கான அரசு இயந்திரமாக மாற்றியமைப்பது தான். அப்படி மாற்றியமைத்தால் தான் நமக்கான அரசியல் அதிகாரம் பெறமுடியும். நமக்கான அரசியல் அதிகாரம் பெற அரசு இயந்திரத்தை மாற்றியமைக்கவும் ஆதிக்கசாதிவெறியர்களுக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களே ஆயுதப்போராட்டத்திற்கு தயாராவோம்! நக்சல் பாரியாய் அணி திரள்வோம்!

பலியிடுவது ஆடுகளைத்தான்; சிங்கங்களை அல்ல – டாக்டர் அம்பேத்கர்

– சிந்தியுங்கள்..

தொடர்புள்ள இடுகைகள்

இட்லரின்வாரிசுகள் இந்தியாவில் இருக்கிறார்கள்!

சீனப் பெரும்சுவரும்! எங்க ஊர் உத்தபுர தடுப்புச் சுவரும்!

என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிடுச்சா???

நம் நாட்டு மக்கள் சுதந்திர தினத்தை அனுஷ்காவின் பேட்டியை பார்த்தோ, ஷ்ரேயாவின் பேட்டியை பார்த்தோ, விக்ரமின் பேட்டியை பார்த்தோ அல்லது புதுப்படங்களை பற்றிய நிகழ்ச்சியை பார்த்தோதான் கொண்டாட வேண்டிய ஒரு அவலமான நிலை உள்ளது. சுதந்திர தினமாச்சே சுதந்திர தின உணர்வூட்டும் பாடல்களை போடலைனா எப்படி? காலையில் யாரும் எழுந்திருப்பதற்கு முன்னமே ஏதோ சடங்குக்கு என்று சுதந்திரம் பற்றிய பாடல்களை ஒளிப்பரப்புவார்கள். ஏனென்றால் மதியம் போட்டால் அந்த நிகழ்ச்சிகளில் விளம்பரத்தின் மூலம் அதிக பணம் சம்பாதிக்க சாத்தியங்கள் குறைவு என்று தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாதா என்ன? அவர்கள் அவ்வளவு முட்டாள்களா?

சுதந்திர தினமோ, குடியரசு தினமோ அப்பாக்கள் தினமோ ஆயாக்கள் தினமோ எதை கொண்டாடினாலும் சினிமாவும் சினிமா நட்சத்திரங்களும் இல்லாமல் கொண்டாடவில்லையென்றால் அந்த நாள் சபிக்கப்பட்ட நாள். அப்படிப்பட்ட சபிக்கப்பட்ட நாளை நம் மக்கள் கற்பனையில் கூட நினைத்துப்பார்க்க முடியாது. அந்த அளவுக்கு சினிமா என்னும் போதை மக்களை பீடித்திருக்கிறது. சினிமா பற்றிய செய்திகளை மட்டுமே ஊடகங்கள் பரப்பி மக்களை அவர்களின் பிரச்சனைகளை யோசிக்க விடாமல் செய்கின்றன. மக்களும் அதற்கு பலியாகின்றனர். ஊடகமும் சினிமாவும் மக்கள் எதைப்பற்றி யோசிக்க வேண்டும் எதைப்பற்றி பேசவேண்டும் எப்படி பேச வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன. இல்லையென்றால், பிரிட்டன் திட்டமிட்டு காங்கிரசு கைகூலிகளிடம் கொடுத்த இந்த அதிகார மாற்றத்தை வானளாவ கொண்டாடுவார்களா? அல்லது காந்தி ’அஹிம்சை’ என்னும் ஆயுதத்தை கொண்டு வெள்ளையனை விரட்டியவர் என்றும் ’காந்திசம்’ என்றும் புது தத்துவத்தை இந்த உலகத்துக்கே கொடுத்திருக்கிறார் என்று பிதற்றத்தான் முடியுமா?

உண்மையை சொன்னால், இந்திய விடுதலைக்காக காந்தி எடுத்த அஹிம்சை என்னும் ஆயுதத்தை ஒரு துருபிடித்த கத்தி என்றே தான் சொல்லவேண்டும். அதை  வைத்து ஒரு புல்லை கூட புடுங்க முடியாது என்பதே உண்மை. அதைப்பற்றி பிரிதொரு கட்டுரையில் பார்ப்போம்.

அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு அடிமையாக இருந்தோம். இன்று மறைமுகமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு அடிமையாக இருக்கிறோம்.

ஆளும் நாடுகள் மாறியிருக்கின்றன. ஆனால் அடிமை சாசனம் மாறவில்லை. 1947 முன் நிலவிய அதே சூழல் சூக்குமமாக இன்று ‘சுதந்திர இந்தியா’ என்ற பெயரில் நிலவுகிறது. இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமானால் ஆங்கிலேயன் ஆண்ட அதே அரசியல் பொருளாதார கட்டமைப்பு அதிகார மாற்றம் செய்த பிறகும் இன்றும் அந்த கட்டமைப்பு நீள்கிறது. இதற்கு பெயர் தான் சுதந்திரமா?

பிரிட்டனுக்கு அடுத்து இன்று அமெரிக்க மேலாதிக்கத்துக்கு அடிமையாக இருக்கிறோம். நம்மை அடிமைப்படுத்துவதில் பிரிட்டனின் தொடர்ச்சியே இன்றைய அமெரிக்கா.

1947 ஆகஸ்டு 15 உண்மையாக இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது என்று சிலர் அப்பாவித்தனமாய் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அதுவொரு அதிகார மாற்றமே . அதாவது 1947 அதிகார மாற்றம் செய்த பிறகும் பிரிட்டன் நம்மை ஆள நினைத்தது என்பதே உண்மை. ஆனால் வெளிப்படையாக அல்ல; ஒளிவு மறைவாக. அதாவது இந்தியாவை இந்திய அரசியல்வாதிகள் ஆளவேண்டும். இந்திய அரசியல்வாதிகளை பிரிட்டன் ஆளவேண்டும். அதனால் 1947 க்கு பிறகும் சுதந்திர இந்தியாவை (?) காமென்வெல்த்துக்குள் இருத்தி வைப்பதே பிரிட்டனின் திட்டம்.

1943 ஏ ஏப்ரல் 16 அன்று “இந்தியாவை அடுத்த பத்தாண்டுகளுக்கு நமது காமன்வெல்த்தில் இருத்தி வைத்தல் நமக்கு முன் உள்ள மகத்தான விஷயம். இது பிரிட்டிஷ் கொள்கையின் அதி உயர் இலக்காக இருக்க வேண்டும்” என்று அரசுச் செயலர் எல்.ஆம்ரே அன்றைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு எழுதினார்.

அதனால் தான் திட்டமிட்டே அதிகாரத்தை பிரிட்டன் விசுவாசியான காங்கிரசிடம் விட்டு சென்றது பிரிட்டன்.

நேரு கும்பலும்  “குடியாட்சி உரிமை (டொமினியன் அந்தஸ்து) கிடைத்த பிறகும் இந்தியா காமென்வெல்த்தை விட்டு விலகாது” என்று வாக்குறுதி அளித்தது.

நேரு பிரிட்டன் எதிர்பார்த்ததை விட மிகவும் விசுவாசமாகத்தான் இருந்தார்.  அதன் வெளிப்பாடாகத்தான் “பிரிட்டிஷ் முதலாளிகள் இந்தியாவில் தழைத்தோங்குவதற்கு முழுச்சுதந்திரத்தையும் பெறுவர்” என்று டிசம்பர் 1946லேயே அவர்களுக்கு வாக்குறுதி அளித்தார். அதன் தொடர்ச்சியாக கடைசி வைய்சிராய் மவுண்ட் பேட்டனை சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக அவர் விரும்பும் வரை இருக்க வேண்டும் என்றும் கோரினார். காங்கிரசுக்கு அதிகார மாற்றம் கொடுத்த மவுண்ட் பேட்டனுக்கு நன்றி தெரிவிக்க இதை விட பெரிய பதவி இருக்க முடியாதல்லவா? நேருவின் படேலின் விசுவாசத்திற்கு நிகராக அன்றைய கால கட்டத்தில் யாரும் அவர்களுக்கு இணையில்லை.

ஆங்கிலேயர்கள் அப்போது நினைத்திருக்கக்கூடும் “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள்!

1947ல் ஆட்சி மாற்றம் நடந்தபிறகும் கூட நம் நாட்டின் நிர்வாக அமைப்பிலோ, அரசியல் அமைப்பிலோ, இராணுவத்திலோ, பொருளாதாரத்திலோ மாற்றம் ஏற்படவில்லை.

நிர்வாக அமைப்பில் ஐ.சி.எஸ் (இந்தியன் சிவில் சர்வீஸ்) தொடர்ந்து நீடித்தது. பிறகு ஐ.ஏ.எஸ் என்று மாறியது (பெயர் மட்டும் தான்). காவல் துறையும் நீதித்துறையும் சிற்சில மாற்றங்களுடன் அப்படியே தொடர்ந்தன. 1935ல் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்த மொத்தம் 395 பிரிவுகளில் சுமார் 250 பிரிவுகள் அடிப்படைக்கொள்கைகள் மாறாமல், எழுத்துமாறாமல் அல்லது கொஞ்சம் மாற்றியோ எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்திய இராணுவத்தின் முப்படைத் தளபதிகளாக பிரிட்டிஷ்காரர்களாகவே இருந்தனர். தொடர்ந்து பணியில் நீடிக்குமாறு இந்திய இராணுவத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் (49%) மற்றும் பிரிட்டிஷ் சிப்பாய்கள் (94%) கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலும் சிப்பாய்களுக்கு 50% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.

ஆனால் ஐ.என்.ஏ (இந்திய தேசிய இராணுவம்) இராணுவ வீரர்களோ, அதிகாரிகளுகோ இந்திய இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. பிப்ரவரி 1946ல் நடந்த கப்பற்படை எழுச்சியில் இருந்த கப்பற்படை வீரர்களுக்கும் இந்திய இராணுவத்தில் இடமில்லை. இப்படியெல்லாம் தன் வாலை காங்கிரஸ் நேரு கும்பல் ஏகாதிபத்திய பிரிட்டனுக்கு ஆட்டியது.

காலனி ஆட்சிக்கு பிறகு ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தில் இந்தியா பொருளாதாரத்தில் சுயசார்பு தன்மையை பெற்றிருக்கவில்லை. பிரிட்டிஷ் பொருளாதாரத்தின் வால் போன்று இருந்தது. இந்திய பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் பிரிட்டிஷ் மூலதனம் ஆதிக்கம் செலுத்தி மக்களின் வாழ்வாதாரங்களை ஒட்ட சுரண்டிக் கொழுத்தது.

ஆட்சி மாற்றம் நடந்த சில ஆண்டுகளுக்கு பின்னும், இந்திய ரூபாய் பிரிட்டிஷ் ஸ்டெர்லின்குடன் பிணைக்கப்பட்டிருந்தது.

ஜூலை 7, 1950 அன்று “எமது பொருளாதாரம் இயல்பாகவே இங்கிலாந்துடனும், பிறக்கூட்டணி / நட்பு சக்திகளுடன் இணைக்கப்பட்டுள்ளது” என்று நேரு கூறினார்.

இன்று  “அமெரிக்காவின் நட்பு சக்தியாக இந்தியா என்றென்றும் விளங்கும்” என்று மன்மோகன் சிங் கூறுகிறார்.

சுதந்திரம் சுதந்திரம் என்று பிதற்றுகிறோமோ, இது உண்மையிலேயே மக்களுக்கான சுதந்திரம் தானா என்பதை நாம் யோசிப்பதில்லை.

பிரிட்டன் பின்னுக்கு தள்ளப்பட்டு ஏகாதிபத்திய தலைமைக்கு அமெரிக்கா வந்தது. ஏகாதிபத்திய தலைமை மாறியவுடன் நம்முடைய தலைமையும் மாறிவிட்டது. இன்று அமெரிக்காவுக்கு நாம் அடிமை. இதை தான் நாம் ‘மறுகாலனியாக்கம்’ என்கிறோம்.

நம் நாட்டில் அரசியல் சுதந்திரம் உள்ளதா?

நமக்கு ஓட்டு போட்டு சட்டமன்ற உறுப்பினர்களையோ, நாடாளுமன்ற உறுப்பினர்களையோ தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டும் தான் பெயரளவில் உள்ளது. (ப.சிதம்பரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பணத்தால்) ஆனால் யாரை அமைச்சர் ஆக்க வேண்டும் என்ற உரிமை நம்மிடம் இல்லை. அமைச்சர்களை நியமிப்பது முழுக்க முழுக்க கார்ப்பரேட் கம்பெனிகளும் ஏகாதிபத்திய நாடுகளும் தான். கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களுக்கான அமைச்சரை தேர்ந்தெடுக்க நீரா ராடியா என்னும் ஏஜெண்டை நாடியதும் அவர்கள் பேசிய பேரங்களும் டேப் மூலம் நாறியது இந்த நாட்டுக்கே தெரியும். பெட்ரோலிய அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யர் அமெரிக்காவின் ஆதாயத்திற்கு ஒத்து வரமாட்டார் என்று தெரிந்ததும் அமெரிக்கா தலையிட்டு பெட்ரோலியத்துறை அமைச்சரை மாற்றியதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. அதை இந்த உலகமே அறியும். அமைச்சர்கள் மட்டுமல்ல, நம் நாட்டின் பிரதமர் என்பவரை கூட நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது. அமெரிக்காவின் ஆசி பெற்றவரே பிரதமராக முடியும். இப்படி அரசியலில் அமெரிக்காவிற்கு அடிமையாய் இருக்கும் இந்தியாவிற்கு உண்மையிலேயே அரசியல் சுதந்திரம் இருக்கிறதா?

நம் நாட்டில் பொருளாதார சுதந்திரம் உள்ளதா?

சமூகம் சரியாக இயங்கவும், நாட்டின் வரவு செலவுகளை திட்டமிடவும் பட்ஜெட் போடுகிறோம். ஆனால் நம் நாட்டின் பட்ஜெட் அமெரிக்காவில் உள்ள உலக வர்த்த அமைப்பு (WTO), உலகவங்கி மற்றும் சர்வதே நிதியம் (IMF) ஆகியவற்றிடமிருந்து ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் தான் என்ன? நம் நாட்டின் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் போடுவதன் நோக்கம் தான் என்ன? நம் நாட்டின் பொருளாதாரம் என்பது தனியார்மயத்தை நோக்கியும், உலகமயமாக்கலை நோக்கியும், தாராளாமயமாக்கலையும் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நம் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லக்கூடிய விவசாயத்தில் இன்று என்ன நிலைமை. பி.டி. பருத்தி பி.டி கத்திரிக்காய் போன்ற மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளால் யாருக்கு லாபம்? விவசாயிகளுக்கா? அல்லது ஒவ்வொரு முறையும் விதைக்காக விவசாயிகள் கையேந்தும் அமெரிக்க தனியார் கம்பெனிகளுக்கா? கத்திரிக்காய் மட்டுமல்ல, பருத்தி, நெல் போன்றவற்றிற்கும் விதை நெல் விவசாயிக்கு சொந்தமில்லை. விவசாயி நினைத்தாலும் விதை நெல் கிடைக்காது. ஏனெனில் விவசாயிகள் விலை கொடுத்து வாங்கும் விதைகள் ஒரு முறை மட்டுமே விளையக்கூடியவை (லெகான் கோழிகள் போல). அவற்றிலிருந்து மறுபடியும் விதை எடுக்க முடியாதவிதமாக விதைகளில் மரபணு மாற்றம் செய்துள்ளன இந்த விதை கம்பெனிகள். விதை நெல் மட்டுமல்லாது விதை நெல் வாங்கும் கம்பெனியிடமிருந்தே உரத்தையும் வாங்கவேண்டும். அதற்கான உரிமம வாங்கியுள்ளது அமெரிக்க மான்சாண்டோ நிறுவனம். அந்த உரத்தைத்தான் போட வேண்டும். விவசாயத்துறையே அமெரிக்க கம்பெனிகளுக்கு தாரைவார்க்கப்பட்டிருக்கிறது. நிலைமை இப்படியிருக்க விவசாயிடம் நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம் என்ற பஜனைகள் பாடப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் எண்டோ சல்பான் எனப்படும் பயங்கரமான நச்சுத்தன்மை வாய்ந்த (இதன் விஷம் காற்றில் பரவி மனிதர்களுக்கும் கண்டுப்பிடிக்க முடியாத புது புது வியாதிகள் வந்துள்ளன) பூச்சிக்கொல்லி மருந்துகள் அமெரிக்கா மற்றும் மற்ற உலக நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் நமது நாட்டில் மட்டும் அந்த பூச்சிக்கொல்லி மருந்து  புழக்கத்திலேயே உள்ளது. அமெரிக்காவிலேயே தடைசெய்யப்பட்ட அமெரிக்க கம்பெனியின் மருந்துக்கு இந்தியாவில் தடையில்லை. அமெரிக்க கம்பெனியின் நலனை அமெரிக்காவை விட இந்திய அரசே தூக்கிப்பிடிக்கிறது. நம் நாட்டின் விவசாயம் அமெரிக்காவிற்கு அடிமையாகி பல ஆண்டுகள் ஆகின்றன. நமக்கு விவசாயத்தில் நமக்கு தேவையான விளைச்சலை செய்யவோ, பொருளாதாரத்தில் சுயசார்பு தன்மையை நிலைநாட்டவோ சுதந்திரம் இருக்கிறதா?

பிரிட்டிஷ்காரனுக்கு அடிமையாக இருந்ததை தொடர்ந்து நாம் இன்னும் அமெரிக்காவுக்கும், நம் நாட்டின் தரகு முதலாளிகளுக்கும் அடிமையாகவே இருக்கிறோம். அன்று நேருவின்  ‘அடிமை’ கும்பலை தொடர்ந்து இன்று அதன் தொடர்ச்சியாக மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் ஆகியோர் உள்ள ’அடிமை’ கும்பல் ஆட்சியில் இருக்கிறது. ஆளம்பனா மாறியிருக்கலாம். ஆனால் அடிமைத்தனம் இன்னும் மாறவேவில்லை.

சமூக சுதந்திரம் கிடைத்துவிட்டதா?

 

அன்று வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கும், இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் விசுவாச நாய்கள் பார்ப்பன – பனியா கும்பலே.

இவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு வால் பிடித்துக்கொண்டே இவர்களுக்கு சுரண்டவும் ஆளவும் ஒரு கூட்டம் தேவை. அது தான் தாழ்த்தப்பட்ட மக்கள்.

சுதந்திரம் கிடைத்து விட்டது என்று ஊளையிடும் இந்த நரிகள் சொந்த ஊரில் தீண்டாமை கொடுமையை அனுதினம் அனுபவிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் சுதந்திரம் பற்றி முனுகியதுண்டா?

சொந்த ஊர் தெருவில் ஒருவன் நடக்கக்கூடாது. நடப்பதை தடுக்க தீண்டாமை சுவர்.

சொந்த ஊர் தெருவில் ஒருவன் சைக்கிள் கூட ஓட்டக்கூடாது. சொந்த ஊரில் செருப்பு போட்டு நடக்கக்கூடாது நடந்தால் சவுக்கடிகள் தண்டனை.

ஆனால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஜெய்பீம்ம்முங்கோ……..

மாரியம்மனுக்கு மேக்கப் போட்டு கதை எழுதிய பார்ப்பனகும்பல்!

டி மாதம் பிறந்துவிட்டது. கிராமங்களிலும் நகரங்களிலும் ஆங்காங்கே வீடுகளிலும் கோவில்களிலும் கூழ் ஊற்றுவதும், கரகம் தூக்குவதும், பாட்டுக்கச்சேரி(ஆபாசமான பாடல்களும் பாடப்படும்), நடன நிகழ்ச்சி (ஆபாசமான நடனங்களும் ஆடப்படும்) நடப்பதும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். பக்தி என்ற பெயரில் நடக்கும் கேளி கூத்துக்கு அளவேயில்லை.

ஆடிமாதம் மாரியம்மனுக்கு பண்டிகை நடத்துவது கிராமங்களில் தான் ஆரம்பமானது. கிராமத்து மக்கள் நகரத்து இடம் பெயர்ந்த போது மாரியம்மனும் மாரியம்மன் திருவிழாவும் இடம் பெயர்ந்து நகரத்திற்கு வந்துவிட்டது. கிராமங்களில் உழைக்கும் மக்கள் மாரி(மழை)க்கு நடத்தும் விழாவாகவும் மாரியம்மன் திருவிழா இருந்திருக்கிறது. ஆதி புராதன சமூகத்தில் தாய் வழி சமூகமே நிலவியது. அதனால் தான் புராதன மக்களின் வணக்க குறியீடாக இருந்தது அம்மன்கள். நம்மிடையே பெரும்பாலானவர்களுக்கு குல தெய்வமாக பெண் தெய்வமாகவே இருப்பதை கவனிக்க! குலதெய்வம் எனப்படும் பெண் ஒரு காலத்தில் அந்த குலத்திற்கு தலைமை வகித்தவாராயிருப்பார்.

விஷ்ணுவையும் சிவனையும் விட்டு அம்மனை வழிபடும் மக்களை பார்த்த பார்ப்பன கூட்டம் சும்மா இருக்குமா?

பழங்குடி சமூகத்தில், வேட்டையாடுவதை தொழிலாக கொண்டு வாழ்ந்த முருகனை விநாயகனுக்கு தம்பியாக, (சுப்)பிரமணியாக மாற்றியது பார்ப்பனீயக்கூட்டம். ஆனால் சுப்பிரமணி பழனியில் கோவனத்துடன் நிற்கிறாரே என்றதற்கு, கோவனத்துக்கு தனிக்கதை எழுத வேண்டுமே, அதற்கு ஞானப்பழம் கிடைக்காததால் கோவனத்துடன் சென்றுவிட்டார் என்று எழுதி திரைக்கதையை சரிசெய்தது பார்ப்பனக்கும்பல்.

வேட்டைத்தொழில் செய்த பழங்குடியின் அடையாளமாக, கட்டிய கோவனமும் வேலும் வைத்துள்ள மனித உருவமாக இருப்பதை பார்த்தால் தெரியும் (கற்பனையாக, யானைமுகம் மனித உடம்பு கொண்ட ஜந்து, மனித உருவத்தில் உள்ள முருகனுக்கு அண்ணனாம்).

முருகனுக்கு காஸ்டியூம் போட்ட பார்ப்பனகும்பல் மாரியம்மனுக்கு மேக்கப் போட்டு திரைக்கதை தயாரித்தது. முருகனுக்கு பிட்டைப்போட்டது போல அம்மனுக்கும் பிட்டை போட்டது பார்ப்பன கூட்டம். அதுவும் இழிவாக!

அதாவது ஜமதக்கினி என்னும் முனிவரின் மனைவி ரேணுகாதேவி. ஒருமுறை ரேணுகா தேவி கங்கையில் நீராட செல்லும் போது அழகான கார்த்தவீரியனை பார்த்து மயங்கிவிட்டார். (மயங்கியபிறகு என்ன நடந்தது என்று என்னைக்கேட்க கூடாது). இதை தெரிந்த கணவர் தன் மகன் பரசுராமனை கூப்பிட்டு, உன் தாய் தவறிழைத்திருக்கிறாள் அதனால் அவளை கொன்றுவிடு என்று அனுப்பினான். மகனும் யார் தடுத்தும் சொல்லியும் கேளாமல் தாயை கொன்று தலையை கொண்டுவந்தான். மகன் செய்த அற்புதமான காரியத்திற்கு என்ன வரம் வேண்டும் என்றாலும் கேள் தருகிறேன் என்று தகப்பன் கேட்க, மகன் துக்கம் தாளாமல் தனக்கு தன் தாய் வேண்டும் என்று கேட்டான். முனிவர் அதற்கு இசைந்து உன் தாயின் உடம்பை கொண்டு வா. நான் பிழைப்பிக்க வைக்கிறேன் என்றார். உடம்பை தேடிச்சென்று பார்த்த போது பல முண்டங்கள் இருந்ததால் ஏதோ ஒரு உடலுடன் கொண்டுவந்தான் மகன். இதை பார்த்த முனிவர் உயிர்பிழைக்க வைத்து,  பிறகு மனைவியை பார்த்து இனி நீ இங்கு இருக்க வேண்டாம். கிராமங்களுக்கு போய் வாசம் செய்து கிராம மக்களுக்கு நோய் வந்தால் பரிகாரம் செய்து கொண்டிரு என்று அனுப்பிவிட்டார். இப்படி சொல்கிறது சிவ புராணம். அதாவது பார்ப்பனர்கள் பார்வையில் நடத்தை கெட்ட பெண்ணே கிராமத்து உழைக்கும் மக்கள் வணங்கும் மாரியம்மன். உழைக்கும் மக்கள் அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் வணங்குவது நடத்தைகெட்ட பெண் என்று முத்திரை குத்தியது பார்ப்பனக்கூட்டம். இது போல கலாச்சாரத்தில் ஒவ்வொன்றையும் சிதைத்து பார்ப்பன ஆதிகத்தை நிலைநாட்ட விரும்புகிறது உச்சிகுடும்பி கும்பல்.

மண்ணின் மொழியான தமிழுக்கு பார்ப்பனக்கூட்டம் இட்ட பெயர் நீச பாஷை. உழைக்கும் மக்களுக்கு இட்ட பெயர் சூத்திரர்கள், பஞ்சமர்கள், சண்டாளர்கள், தீண்டத்தகாதவர்கள்.

விலைகுறைவாக இருக்கும் மாட்டுக்கறி தீண்டத்தகாதவர்கள் உண்ணும் உணவு.

அவாள் படிக்கும் படிப்பை நாமும் படிக்கக்கூடாது. அப்படி சமச்சீர் கல்வி என்று பேசினால் சமச்சீர் கல்வி தரமற்றது.

இவ்வாறு மக்களின் கலாச்சாரத்தை சிதைத்து பார்ப்பனீய கலாச்சாரம் என்னும் சனாதனத்தை திணித்து உழைக்கும் மக்களை ஏய்த்து சுரண்டி கொழுக்கிறது பார்ப்பன கும்பல்.

கடவுள்களை, சடங்குகளை, தீயிலிட்டு பொசுக்க வேண்டும். நாம் அனைவரும் பார்ப்பனக்கலாச்சாரத்தை வேரறுக்கவேண்டும். உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் பார்ப்பனக்கூட்டத்திடம் இருந்து உழைக்கும் மக்களின் கலாச்சாரத்தை மீட்டெடுக்க தொடர்ந்து போராடவேண்டும்!

 – சிந்தியுங்கள்

 தொடர்புடைய இடுகைகள்

‘கோ’ – விஷம் ஏற்றும் ஊசி

கமலின் ‘குருதிப்புனல்’ என்னும் விஷமப்படத்தின் அடுத்த வரிசையில் இடம் பெறும் படம் ‘கோ’. மக்களுக்காக போராடும் போராளிக் குழுக்களை எந்த அளவு கொச்சப்படுத்த முடியுமா அந்த அளவுக்கு கொச்சைப்படுத்தியுள்ளது.

சமூகப் பொருப்புள்ள, அதே நேரத்தில் குறும்பு(?) தனமும் செய்யும் பத்திரிக்கைக்காக புகைப்படம் பிடிக்கும் புகைப்படக்கலைஞன் மற்றும் செய்தியாளன் வேலை செய்யும் இளைஞன் தான் ‘ஜீவா’. அதாவது, தேர்தலில் நிற்கும் இளைஞர்களுக்கு உதவும் சமூகப் பொருப்பும், அலுவலகத்தில் பணிசெய்யும் சக தோழியின் உடம்புக்கு மார்கெட் ரேட் பேசும் குரும்புத்தனமும் உள்ள இளைஞன்.

பேங்க் கொள்ளையில் ஈடுபடும் கும்பலை சர்க்கஸ் சாகசங்கள் காட்டி அவர்களை படம்பிடிப்பது முதல் குடிசைகள் தீப்பற்றி எரியும் போது படம் பிடிப்பது வரை என்று தன் சமூகப்பொருப்பை காமெராவால் படம் பிடித்து படம் பிடித்து மக்களுக்கு படம் காட்டுகிறார். (வீடு பத்தியெரியும் போது இவன் என்ன படம் புடிச்சிட்டிருக்கானே என்று படம் பார்ப்பவர்கள் எண்ணாமலிருக்க முடியாது. என்ன பண்றது சூடா செய்தி கிடைக்கும் போது சும்மா இருக்க முடியாதுல்ல!)

ஜீவாவின் கதாப்பாத்திரத்தின் பிண்ணனி, பத்திரிக்கை செய்திகளுக்காகவும், பத்திரிக்கையின் விற்பனை எண்ணிக்கை பெருக்குவதற்காகவும் சுவாரஸ்யமான போட்டோக்களை எடுக்கும் சராசரி போட்டோகிராபரின் புத்திதானே தவிர வேரெதுவும் இல்லை.

இந்த படம் ஒரு பயங்கரவாத கும்பலை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது.

கதையைப் பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால் நக்சலைட் நெட்வொர்க் எந்த அளவுக்கு உள்ளது. அவர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள், பத்திரிக்கை எந்த அளவுக்கு நேர்மையானவர்களால் இயக்கப்படுக்கிறது, அவர்களின் நேர்மையை பொருக்காத அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் பத்திரிக்கைக்கு இடையூறு விளைவிக்கின்றனர். பயங்கரவாதிகளின் சதிகள் பற்றிய உண்மையெல்லாம் தெரிந்த பிறகு பயங்கரவாதியை அழித்து அரசியலுக்கு வந்த நேர்மையான இளைஞர்களிடம் தமிழ்நாட்டை ஒப்படைத்து தமிழ்நாட்டை ஒரு பத்திரிக்கையாளன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே கதையின் சாராம்சம்.

விஜயகாந்தும் அர்ஜூனும் நடிக்கும் படங்களில் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுபவர்கள் முஸ்லீம்களாகத்தான் இருக்கும். ஆனால் கமலின் வகையறாவான கே.வி. ஆனந்த் என்னும் அதிமேதாவிகளின் படங்களுக்கு  பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவதற்கு தேவைப்படுவது நக்சலைட்டுகள்.

போராளிக்குழுக்களை மாஃபியா கும்பலாக பார்க்கும் கேவலமாக பார்வையையே தனது முந்தைய படமான அயன் படத்திலும் காட்டியிருக்கிறார் இயக்குனர். இந்தப்படத்தில் நக்சலைட்டுகள். படத்தில் அந்த பயங்கரவாத கும்பல் ஒரு மாஃபியா கும்பல் மாதிரி தான் இயங்கும். ஆனால் வெறுமனே கள்ளக்கடத்தல் கும்பலை காட்டினால் இவருடையப்படங்கள் சராசரியாக இருக்குமே. அயன் படத்தில்  காங்கோ போராட்டகுழுவினரை காட்டியது போல இந்தப்படத்திற்கு தேவைப்பட்டவர்கள் நக்சலைட்டுகள். நக்சலைட்டுகள் என்னும் மசாலாவை கலந்தால் படத்திற்கு ஒரு கிக் இருக்கும் என்று மாஃபியா கும்பலுக்கு நக்சலைட்டுகள் என்று பெயர் வைத்து அழகு பார்த்திருக்கிறார் இயக்குனர். பொதுவாக ரஜினி போன்ற சூப்பர் ஹீரோக்களின் படங்களில் வில்லன்களை பயங்கர பலசாலியாக காட்டி அவர்களை ஹீரோ அடித்து துவைப்பதன் மூலம் ஹீரோக்களின் பலத்தை காட்டுவார்கள். அதுபோல் படத்தில் தான் சொல்ல வந்த கருத்தை, பலமாக காட்டுவதற்கு எதிர் தரப்பில் உள்ள மாஃபியா கும்பலையும் பலமாக காட்டவேண்டும். அதனால் இயக்குனருக்கு தேவைப்பட்டது நக்சலைட்டுகள் என்னும் பரீட்சையமான பெயர். நக்சலைட்டுகளாக காட்டுவது என்று முடிவாகிவிட்டது. அவர்களின் டச் கொஞ்சம் இருக்கவேண்டுமே என்ன செய்வது? அந்த டச்சை வெறும் 40 வினாடிகளில் மட்டுமே (40 நிமிடங்கள் அல்ல)  காட்டுகிறார். அந்த படத்தில் அந்த 40 வினாடிகள் மட்டும் ஒரு நக்சலைட் கதாப்பாத்திரத்தை அரசியல் பேசவைத்திருக்கிறார். அதை அரசியல் என்று கூட சொல்ல முடியாது.  “எங்களின் கொள்கைகளை புரிந்து கொள்வதற்கு நீ ஒடுக்கப்பட்டவனாக இருந்திருக்க வேண்டும்” என்று போஸ் சொன்னதும் உடனே ஜீவா “ஊழலு உண்ணாவிரதம் அறிக்கைன்னு அரசியல் வாதிங்க ஒரு டைலாக் வச்சிருக்காங்கன்னா, ஒடுக்கப்பட்டவன், சுரண்டல், சமூக நீதின்னு நீங்க ஒரு டைலாக் வச்சிருக்கீங்க” என்று கொழுத்துப்போன முதலாளித்துவ வர்க்க வசனம் பேசுவார்.

“ஏண்டா கொழுப்பெடுத்த நாயே, ஒடுக்கப்பட்டவன், சுரண்டல், சமூக நீதின்னா என்னான்னு தெரியுமாடா உனக்கு?” என்று இன்னும் அசிங்கசிங்கமா கே.வி ஆனந்தையும் வசனம் எழுதிய சுபாவையும் வசனம் பேசிய ஜீவாவையும் திட்டலாம் என்று தான் தோன்றுகிறது. ஆனால் எழுத்து நாகரீகம் கருதி அதை என் மனதிற்குள்ளேயே செய்கிறேன்.

திண்ணியத்தில் வாயில் மலம் திணிக்கும் அளவுக்கு மக்கள் இன்னும் தங்கள் உரிமைகளை பெறாதவர்களாய் ஒடுக்கப்பட்டு வாழ்கின்றனர். குதிரை வண்ணானாய், பள்ளனாய், பறையனாய், சக்கிலியனாய் இழிவுப்படுத்தப்பட்டு ஒரு மக்கள் கூட்டமே இந்த நாட்டில் ஒடுக்கப்பட்டுக்கிடக்கிறதே, அந்த ஒடுக்கப்பட்ட மக்களைப்பற்றி கேள்விப்பட்டிருப்பார்களா கே.வி ஆனந்தும் சுபாவும் ஜீவாவும்?

காலையில் சூரியன் உதிக்கும்போது நிலத்தில் கால் வைத்து, சூரியன் மறையும் போது வரைக்கும் நிலத்தில் வேலை செய்யும் கூலி விவசாயிகளின் உழைப்பை சுரண்டிக்கொழுக்கும் சுரண்டலாளர்களைப் பற்றி தெரியுமா இந்த கொழுப்பெடுத்தவர்களுக்கு?

அமெரிக்க பெப்சி கோக் நம் நாட்டின் நீர் வளத்தை சுரண்டி நமக்கே விற்கிறானே இந்த சுரண்டலைப்பற்றி தெரியுமா பெப்சியையும் கோக்கையும் அமுதமாக குடிக்கும் இந்த பணக்கார அற்பர்களுக்கு?

நம் நாட்டில் பெட்ரோல் என்ன விலை விற்கிறதென்றே தெரியாத எத்தர்களுக்கு கெய்ர்ன் கம்பெனி நம் நாட்டில் பெட்ரோலியக் கச்சாப்பொருளை சுரண்டி நமக்கே விற்கிறானே அது தெரியுமா?

பார்ப்பனீயம் மக்களை சாதி ரீதியான பிரித்து இழிவுபடுத்துகிறதே அந்த சனாதனத்தை எதிர்த்து பேசும் சமூக நீதி என்றால் என்ன என்று தெரியுமா இவர்களுக்கு?

இவ்வாறு நம் நாட்டில் ஒடுக்குமுறைகளையும், சுரண்டல்களையும் சமூக அநீதிகளையும் சொல்லி அடுக்கிக்கொண்டே போகலாம்.

சமச்சீர் கல்விக்காக இன்று தமிழ்நாட்டில் மக்கள் பல இடங்களில் போராடுகிறார்கள். இதுவும் சமூக நீதிக்காக மக்கள் நடத்தும் போராட்டம் தான். அனைத்து சாதியினரும் அச்சகராகலாம் என்று போராடுவதும் சமூக நீதிக்கான போராட்டங்கள் தான். தாழ்த்தப்பட்ட மக்களை ஆலய பிரவேசம் செய்து போராடுவதும் சமூக நீதிக்கான போராட்டம் தான். ஆனால் சமூக நீதியையே கொச்சைப்படுத்தி சமூகநீதிக்காகப்போராடிய தலைவர்களையும் மக்களையும் இழிவுபடுத்துகிறது இந்தப்படம்.

சௌத்ரி ஆதிக்கசாதியை சேர்ந்த ஜீவாவுக்கும் மேட்டுக்குடி கலாச்சாரத்தில் வாழும் ஆனந்துக்கும் சுபாவுக்கும் ஒடுக்கப்பட்டவன், சுரண்டல், சமூக நீதியெல்லாம் வெரும் டைலாக்குகளாக தெரிவதில் வியப்பில்லை. ஆனால் இந்த கொழுத்த நாய்கள் மக்களின் உரிமைகளை ஏளனமாகவும் இழிவாகவும் வெளிப்படையாகவே திமிராக பேசும்போது இந்த ஓநாய்களின் வக்கிரம் பொருக்கமுடியவில்லை. நக்சலைட்டுகள் என்பதற்கு பெயர்க்காரணம் கேட்டால் கூட இவர்களுக்கு சொல்லத்தெரியாது. இவர்கள் நக்சலைட்டுகள் என்று கதாப்பாத்திரம் வைத்து படம் எடுக்க என்ன யோக்கியதை இருக்கின்றது? மக்களுக்கான உரிமைகளையே இழிவுபடுத்தும் இவர்கள் நக்சலைட்டுகளை இழிவுபடுத்தி யாரை ஜனநாயக சக்தியாக காட்டுகிறார்கள் தெரியுமா? பத்திரிக்கையாளரை.

இந்த பத்திரிக்கையாளர்களும் பத்திரிக்கைத்துறையும் எப்படி இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். பத்திரிக்கையாளர்களில் நேர்மையானவர்கள் வெகு சிலரே இருக்கின்றனர். எந்த ஒரு பத்திரிக்கையுமே ஏதாவதொரு ஓட்டுச்சீட்டு கட்சிக்கு ஜால்ரா தட்டுகிறது என்பது ஊரறிந்த விடயம். பத்திரிக்கை துறையிலும் அவாளை எதிர்த்து பத்திரிக்கை நடத்தவே முடியாது.

டீ, போண்டா, பஜ்ஜி, கவர் என்று சகிதமும் இருந்தால் தான் ப்ரஸ் மீட்டுக்கு வருவோம் என்று பொருக்கித்தின்னும் பத்திரிக்கையாளர் நாட்டின் நலனை தூக்கிப்பிடிக்கிறாராம்.

சோ போன்ற மாமாக்கள் அரசியல் கட்சிகளுக்கு மாமா வேலை பார்ப்பது இந்த நாட்டுக்கே தெரியும். பர்க்கா தத், வீர் சங்கவி போன்ற ‘ஹைடெக்’ பத்திரிக்கையாளர்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மாமா வேலைபார்த்தது நீராராடியா டேப் மூலம் அம்பலமானது. அதிகப்பணம் வாங்கிக்கொண்டு,விளம்பர இடத்தில் வரவேண்டிய விடயத்தை செய்தியாக போட்டு கம்பெனிகளின் ஷேர்களை ஏற வைப்பது பத்திரிக்கைகள். தமிழர் இனப்படுகொலை நடந்தபோது உண்மை செய்திகளை போடாமல் பணம் வாங்கிகொண்டு ஈழமக்களுக்கெதிரான செய்திகள் போட்டு உண்மையை மூடி மறைத்தது பத்திரிக்கைகள். அதற்கு அவர்களுக்கு நாட்டின் உயர்ந்த விருதான ‘இலங்காரத்னா’ விருது கூட கிடைக்கலாம். இப்படி டீ போண்டா பஜ்ஜி என்று தொடங்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மாமா வேலை பார்ப்பது இனப்படுகொலைப்பற்றிய உண்மைகளை மூடிமறைப்பது என்பன வரை பத்திரிக்கையாளர்கள் தான் செய்து வருகிறார்கள்.

‘தெகல்கா’ போன்ற சில பத்திரிக்கைகளைத் தவிர வேரெந்த பத்திரிக்கைகளையும் நேர்மையான பத்திரிக்கைகள் என்று சொல்லமுடியாது.

ஜனநாயகத்தின் 4 வது தூண் பத்திரிக்கை. ஆனால் பத்திரிக்கை துறைக்கும் ஜனநாயகத்துக்கும் சம்பந்தமே இல்லை. அவர்களுக்கென்று ஒரு அரசியல் கட்சி உண்மைகளை மறைப்பதற்கு பத்திரிக்கை தர்மம் என்று பெயர். சினிமா செய்திகளையும் கிசு கிசு செய்திகளையும்  மட்டும் போட்டு மக்களின் மூளையை மழுங்கடித்ததை தவிர வேரென்ன செய்ய முடிந்தது?

உண்மை இப்படியிருக்க பணம் பொருக்குவதே வேலையாக செய்யும் பத்திரிக்கையாளனுக்கு சமூக அக்கறை, நாட்டுப்பற்று என்னும் பெயிண்ட் அடித்து காட்டுவதும், மக்களுக்காக போராடும் போராளிகளின் முகத்தில் கரி பூசிக்காட்டுவதும் அயோக்கியதனம் இல்லையா?

பிஜேபியும் இந்துத்வா கும்பலும் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து மக்களின் எண்ணங்களில் நஞ்சை புகுத்துவது போல கே.வி.ஆனந்த் வகையறாக்கள் நக்சல்பாரி இயக்கங்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து மக்களின் எண்ணங்களில் நஞ்சை கலக்கின்றனர்.

கே.வி ஆனந்த் இயக்குனராக வருவதற்கு முன் ‘Legend of Bhagat singh’ என்னும் படத்திற்கு ஒளிப்பதிவாளராக வேலைபார்த்தாராம் இயக்குனர். கடைசியா ஒன்னே ஒன்னு கேக்கனும்னு தோணுது.  “ஏண்டா நாயே! பகத்சிங் படத்தில் வேலைபார்த்தாயே பகத்சிங் பற்றி கொஞ்சம் படித்துப்பார்த்திருப்பாயா? த்தூ த்தூஊஊ”

–    சிந்தியுங்கள்

தொடர்புடைய இடுகைகள்

‘அவன் – இவன்’ திரைப்படம் ஒரு பார்வை!

‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ திரைப்படமும் சமூக அவலமும்..

‘அவன் – இவன்’ திரைப்படம் ஒரு பார்வை!

வன்.. வன்.. வனாக இருந்தாலும் திரைப்படங்களில் பார்ப்பனீயத்தைத் தான் தூக்கிபிடிக்கிறான். இதற்கு ஆதாரம் தான் சமீபத்தில் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘அவன் – இவன்’ திரைப்படம். இத்திரைப்படம் மூலம் பாலாவும் தான் யார் என்று மக்கள் முன் காட்டுகிறார். காட்டுவது மட்டுமல்ல பார்ப்பனீய தர்மத்தை பாபா ராம்தேவ் பாணியில் போதிக்கிறார். சினிமாத்துறையில் வெகுசிலர் தவிர பலர் எடுக்கும் திரைப்படங்களில் தெரிந்தோ தெரியாமாலோ பார்ப்பனீயக்கருத்துக்கள் எட்டிப்பார்க்கின்றன. சிலப்படங்களில் பார்ப்பனீயக்கருத்துக்கள் விஸ்வரூம் கூட எடுத்து இருக்கும். அதற்கு காரணம், இயக்குனர்களுடைய வாழ்க்கையில் கலாச்சாரத்தில் பார்ப்பனீயமும் இயல்பாய் கலந்து இருப்பது தான். இயக்குனர்களும் இந்த சமூகத்தின் அங்கம் தானே! சமூகத்தை பிடித்திருக்கும் நோய் இவர்களையும் பீடித்திருக்காதா என்ன! இந்து மதம் கற்றுக்கொடுக்கும் பார்ப்பனீயத்தை கசடற கற்று அதற்கேற்ப தகுந்தார்போல் நிற்க என்று திருக்குறள் படித்த தமிழர்களும் விதிவிலக்கல்ல. பாரத மணித்திருநாட்டில் இந்து மதம் என்னும் தாய் ஊட்டும் க(ள்ளி)லைப் பாலில்  சாதியும் கலந்திருக்கிறது. அதைக் குடித்து வளர்ந்து, திரைத்துறைக்கு வந்து படம் எடுக்கும் கலைஞர்களின் திரைப்படங்களில் பார்ப்பனீயம்  அழகாகவும் ஒருவித கலையாகவும் வருணிக்கப்பட்டிருப்பதில் நமக்கு ஆச்சரியம் இருக்கப்போவதில்லை. ஆனால் ‘கடவுள் மறுப்பு’  ‘நாத்திகம்’ என்று பேசும் நாத்திகவாதிகள் கூட பார்ப்பனீயத்தை தனக்கேற்றார்போல் தன்னுடைய நலனுக்காக கடைப்பிடிப்பது தான் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அப்படிப்பட்ட கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தை தான் இப்படத்தில் அரங்கேற்றியிருக்கிறார் இயக்குனர் பாலா.

சரி படத்திற்கு வருவோம்.   ‘வால்டேர்’ என்னும் கதாப்பாத்திரத்தில் திருநங்கையாக விஷால். ‘கும்பிடுறேன் சாமி’ என்னும் கதாப்பாத்திரத்தில் ஆர்யா.  ‘ஐனஸ்’ என்னும் ஜமீன் கதாப்பாத்திரத்தில் ஜி.எம்.குமார். ஜமீன் என்றால் ஒரு ஊரையே வளைச்சுப்போட்டு உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டி பண்ணையடிமையாய் கூலி விவசாயிகளை நடத்தி கொழுத்து வாழும் உண்மையான ஜமீன் மாதிரி இருக்க மாட்டார். இவர் ரொம்ப நல்லவரு.. விஷாலும் ஆர்யாவும் வாயா போயா என்று பேசும் அளவுக்கு நல்லவருன்னா பாத்துக்கோங்களேன். அந்த ஜமீன் இவங்க வீட்டு திண்ணைல உக்கார்ந்துல்லாம் சோறு சாப்பிடுவார்.

இன்றைய திரைப்படங்களில் கதையிலோ காட்சிகளிலோ கற்பனைகள் இல்லாமல் இருப்பது அரிது. ஆனால் இந்த படத்தில் கற்பனையே கதையாக உலாவருகிறது. யதார்த்தத்திற்கு(?) பெயர் போன பாலாவின் இந்த படத்தில் யதார்த்தம் எங்கே என்று  கதையில் துழாவி தேடிப்பார்க்க வேண்டியுள்ளது. முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த கள்ளர் சாதியினரையும் ஜமீனையும் வைத்து தான் கதையே. அதாவது கதாநாயகர்கள், அம்மா, தந்தை அந்த கிராமம் என்று நாம் படத்தில் காணும் சகலமும் அவர்களை வைத்தே படம் பயணிக்கிறது. ஆனால் இந்தப்படத்தில் வரும் கதாப்பாத்திரங்களோ சென்னைத் தமிழை பேசி கலக்கோ கலக்குனு கலக்கி சொதப்பியிருக்கிறார்கள். சிறுவன் கதாப்பாத்திரத்தில் வரும் சிறுவன் மட்டுமே தென் மாவட்ட மக்கள் பேசும் அதே பாணியில் பேசி திரைப்படத்தில் அந்த மக்களின் யதார்த்தத்தை ஊறுகாய்க்கு காட்டுகிறான்.

தென்மாவட்டத்தில் உள்ளவர்கள் பேசும் மொழிக்கும் படத்தில் பேசும் மொழிக்கும் சம்பந்தமேயில்லை. சென்னை சேரித்தமிழுக்கும், தென்மாவட்டமக்கள் பேசும் தமிழுக்கும் வித்தியாசம் தெரியாத பாலாவின் எதார்த்தத்தை எப்படித்தான் புகழ்கிறார்களோ?

நவரசங்களையும் முகத்தில் காட்டும் நடிப்பு என்கிற பெயரில் விஷாலின் சுத்த அபத்தம் சகிக்க முடியல. இந்த நடிப்புக்கு விஷாலுக்கு தேசிய விருது கண்டிப்பாக கிடைக்குமாம். திருநங்கை பாவனைகள், நடிகனின் நவரச நடிப்பு என்று ஏதோ நடிக்க முயற்சி செய்து இருக்கிறார்.

ஆர்யாவின் நடிப்பும் செயற்கையாக இருக்கிறது. நாக்க மூக்கா பாட்டுல ஷூ போட்டு லுங்கி கட்டிட்டு சேரியில ஆடின பசங்க மாதிரி செயற்கையா இருக்கு. மஷ்ரூம் கட்டிங் வெட்டி காப்பி கலரை தலையில பூசியுள்ள வசதிக்கார சென்னைப்பையன் குளிக்காம முக்கால் டவுசரை மாட்டிக்கிட்டு வசனம் பேசி கலாட்டா செய்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது ஆர்யாவின் பேச்சும் நடிப்பும்.  கேரளாவில் ஒரு திரைப்பட விழாவில் பேசிய ஆர்யா “தமிழ் ரசிகர்கள், தமிழ் படங்களில் நடிகர்கள் எப்படி நடித்தாலும் ரசிப்பார்கள். ஆனால் கேரள மக்கள் அப்படியல்ல” என்று தமிழ் ரசிகர்களை மட்டுப்படுத்தியிருக்கிறார். விஷால் ஆர்யா நடிப்பை ரசிக்கும் அளவுக்கு கலைஞானம் எனக்கு மட்டமாக இல்லை (ஆர்யா சொன்னது போல) .  “விஷால் ஆர்யாவின் பெர்மான்மென்ஸ் சூப்பர்” என்று சொல்லும் அளவுக்கு எனக்கு மனதைரியமும் இல்லை.

திருடன், ஏமாத்திறவன், வேலைக்கு போகாம கப்பா சுத்திட்டு இருக்கிறவனையெல்லாம் காதலிக்கும் வசதியான பெண்களை சினிமாவில் மட்டும் தான் நாம் பார்க்கமுடியும். அதே பெண்ணை இந்த படத்திலும் ஆர்யாவை காதலிப்பதை பார்க்கலாம். விஷால் பெண் போலிசை பார்த்து பெண்கள் அணியும் பேண்டுக்கு ஜிப் இருக்குமா இருக்காதான்னு கேட்பாராம். அந்த பெண் போலிசு சிரிச்சிட்டே அசடு வழிஞ்சிட்டே போகுமாம். இப்படிப்பட்ட பெண் போலிசை எந்த ஊரில் பார்த்தாரோ பாலா? இதெல்லாம் யதார்த்தமான்னு பாலாவுக்கு எப்படித்தான் தோணுதா?

கதாநாயகர்களின் அம்மாக்களின் கதாப்பாத்திரங்கள் செய்யும் அலப்பரைகளும் பேசும் வசனங்களும் ஓவரோ ஒவர். பூட்டு திறந்ததற்காகவெல்லாம் டப்பாங்குத்து குத்துகிறார்கள். மகனும் அம்மாவும் எடுத்ததெற்கெல்லாம் கொச்சையாக பேசுவது முகம் சுளிக்க வைக்கிறது. ஏன் என்று கேட்டால் “எதார்த்தம்” என்று பாலா பதில்  சொல்லலாம். எதார்த்தம் என்பதற்கு அம்பிகாவின் வாயில் பீடியை திணிப்பது போல் கற்பனையாக வசனங்களை திணிக்க வேண்டிய அவசியமில்லை. கள்ளர் சாதியினரை  ‘குற்றப்பரம்பரையினர்’ என்னும் இழி பெயரை  சமூகத்தில் தாங்கியுள்ளார்களே அது யதார்த்தமாக தெரியவில்லையா? அதை எதார்த்தமாக காட்டியிருக்கலாமே! அல்லது முக்குலத்தோர் பிரிவினர், தான் ஆண்டப்பறம்பரையினர் என்னும் கனவில் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குகிறார்களே அது யதார்த்தமாக தெரியவில்லையா பாலாவுக்கு? தெரிந்தாலும் பாலா பேசத்தயாரா? அதையெல்லாம் எதார்த்தமாக காட்டியிருக்கலாமே!

 “பீ தின்னச் சொன்னாலும் தின்றேன்..”  “எனக்கு மாவு மாவாப் போகுதும்மா..”  “பொம்பளைங்க பேண்டுக்கு சிப் இருக்குமா இருக்காதா” போன்ற வசனங்களை பேசவைத்த பாலாவுக்கு கள்ளர் சாதியினரின் ஆதிக்க சாதிவெறியைப்பற்றி வசனம் பேசவைக்க முடியுமா? ஒருவேளை அது கதைக்கு தேவையற்றதாக இருந்திருக்கலாம். தேவையென்னவோ அது மட்டுமே இடம்பெறும் ‘பீ’ யைப்போல. இல்லையா பாலா?

இப்படி கள்ளர் சாதியினர் பற்றிய யதார்த்தம் பற்றி எதுவுமே பேசாமல் கள்ள மௌனம் காக்கிறார் பாலா. அதுமட்டுமல்லாமல் இன்னொரு விஷமத்தனமாக கருத்தையும் புகுத்துகிறார். அதாவது மாடுகளின் புனிதத்தைப் பற்றி பேசி பார்ப்பனீயக்கருத்தை போதித்திருக்கிறார்.

பாபா ராம்தேவ் சீடராக பாலா எப்ப மாறினார்னு தெரியல.

சில தினங்களுக்கு முன்னால் பாபா ராம்தேவ் சென்னையில் யோகா பயிற்சி சொல்லித்தரும் போது பயிற்சிக்கு வரும் மக்களுக்கு மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது; மாடு புனிதம் என்னும் சனாதன இந்து மதக்கருத்தை போதித்தார். அந்த இடங்களில் பெரியார் திராவிடர் கழகத்தினர் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டு அவருடைய பார்ப்பனீய பிரச்சாரத்திற்கெதிராக போராட்டம் செய்தனர். போராட்டம் செய்தவர்களை காவல் துறை கைது செய்தது.  ராம்தேவ் வெட்டவெளிச்சமாக பார்ப்பனீய தர்மத்தை நிலைநாட்டுவதிலும் அதை போதிப்பதிலும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் அவர் இந்துத்வா கும்பலைச்சார்ந்தவர். ஆனால் “எத்தனை நாள் நாங்க உங்களை கும்பிடுறேன் சாமின்னு சொல்றது” என்றும், சிவனை கலாய்த்தும் வசனங்களை பேச வைத்த பாலா மாடுகளைப்பற்றி புனிதமாக சித்தரித்தப்பதில் தான் அவருடைய உண்மையான முகம் அம்பலமாகியுள்ளது. இந்தப்படத்தில் மாடுகளுக்கு பதிலாக ஆடுகளையோ கோழிகளையோ காட்டியிருக்கலாமே! அதில் ஏதேனும் பிரச்சனையிருக்கிறதா?  “ஏதோ மாடு என்று எதேச்சையாக காட்டியிருக்கிறார். அதை இப்படி குறிப்பாக விமர்சிக்கத்தேவையில்லையே” என்று நீங்கள் கருதலாம். இது ஏதோ எதேச்சையாகவோ தற்செயலாக எடுக்கப்பட்ட காட்சியோ அல்ல. பாலாவின் எண்ணத்தில் அவர் கருத்தில் என்ன இருக்கிறதோ அது தான் காட்சியாக வருகிறது. சமூகத்தில் சாதிவெறியர்களின் கருத்து என்னவாக இருக்கிறதோ அது தான் இந்தப்படத்திலும் பிரதிபலிக்கிறது. அதனால் தான் மக்கள் உழைப்பில் உண்டு கொழுத்து, மிருகங்களை வேட்டையாடுவதையே பெருமையாக கருதும் ஜமீனை வைத்து மாடுகளை வதைக்கக் கூடாது என்று ஜீவகாருண்யம் பேச வைத்திருக்கிறார் பாலா.

“ஒவ்வொரு சொல்லிற்கும் செயலிற்கும் பின்னே ஒரு வர்க்கமும் வர்க்க நலனும் ஒளிந்து கொண்டிருக்கிறது” என்றார் காரல் மார்க்ஸ்.

பாலாவின் படத்தின் மூலம் அவருடைய வர்க்க நலனும் சாதிய நலனும் தெளிவாய் தெரிகிறது. இந்தப்படத்தில் மட்டுமல்ல, ‘நான் கடவுள்’ படத்தில் கூட  “மாட்டுக்கறி சாப்பிட்டாலும் புத்தி நல்லா வேளை செய்யுது” என்கிற வசனம் இடம் பெற்றது. இந்த வசனம் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துகிறது என்பதை நிரூபிக்க பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. போன படத்தின் நீட்சியாகத்தான் ‘மாடுகளே புனிதம்’ என்கிற பார்ப்பனீயக் கருத்தை இந்தப்படத்தில் திணிக்கிறார் பாலா. இது மாட்டுக்கறி உண்ணும் மக்களை கேவலமாக பார்க்கும் பார்வையை தான் அளிக்கும். அப்படியெல்லாம் இல்லையென்கிறீர்களா?

உங்கள் வீட்டில் அசைவம் சமைத்து உண்ணும் பழக்கம் இருந்தால் உங்கள் வீட்டில் மாட்டுக்கறியையும் ஒரு அசைவமாக கருதி வீட்டில் சமைத்து சாப்பிட்டு பார்த்திருக்கிறீர்களா? இல்லையெனில் அந்த காரணத்தை உங்கள் வீட்டில் கேட்டுப்பாருங்கள்.

  1. கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தால் பசு இந்துக்களுக்கு புனிதம் அதனால் சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். சரி. சேவல் கூடத்தான் முருகனுக்கு ஏற்றது. ஆனால் சிக்கன சிக்கன் 65 சிக்கன் பக்கோடா சிக்கன் லாலிப்பாப் என்று முக்கு முக்குனு முக்குராங்களே ஏன் என்று கேட்டால் என்ன பதில் சொல்வார்கள்?
  2. படித்தவர்கள் அறிவியல் ரீதியாக காரணம் சொல்வார்கள். அதாவது மாட்டுக்கறி சாப்பிட்டால் வியர்வை துர்நாற்றம் வீசுமாம். சரி எந்தக் கறி சாப்பிட்டால் வியர்வை மல்லிப்பூ மாதிரி மணக்கும் என்று கேட்டால் பதில் சொல்வார்களா? வியர்வை என்றாலே துர்நாற்றம் வீசத்தான் செய்யும்.

ஆக இவர்கள் சொல்லும் காரணங்கள் அனைத்தும் மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்னும் முன்னோர்கள் விதித்த முன்முடிவிலிருந்தே தான் சொல்வார்கள். உண்மையான காரணத்தை அம்பேத்கர் தன் ஆய்வில் சொன்ன பவுத்தத்துக்கும் பார்ப்பனீயத்துமாக போராட்டத்தை படித்தால் தான் தெரிந்துகொள்ள முடியும்.

மாட்டுக்கறியை உண்ணும் மக்களை உங்கள் வீட்டிலுள்ளவர்கள் என்ன கருதுகின்றனர் என்பது தெரியுமா உங்களுக்கு? அவர்களை இழிவான மக்களாகத்தான் பார்க்கிறார்கள்.

இதை எதிர்த்து தான் பெரியாரும் “வளர்ந்த ஆடு தான் மாடு. மாட்டுக்கறி சாப்பிடுவதில் தப்பில்லை” என்றார். மாட்டுக்கறி சாப்பிட்டால் ச்சீ.. என்று பார்க்கும் பார்வையானது தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான ஒரு சாதி இந்துவின் மனோபாவமே தவிர வேரெதுவும் இல்லை. அப்படிப்பட்ட கருத்தைத் தான் மாடுகளை லைசென்ஸ் இல்லாமல் விற்பனை செய்யும் கதாப்பாத்திரம் வாயிலாக காட்டுகிறார் பாலா. கையில் சவுக்கு கயிறுகள் என்னும் அடையாளம் வைத்து சாலையில் மாட்டுவண்டி வைத்து லோடு வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட நபரை ஞாபகப்படுத்துகிறார் பாலா. அதுவும் கொடூரமாக கொலை செய்யும் கொலையாளியைப்போல!

கள்ளர் சாதியை சேர்ந்த ஒரு பெண் பள்ளர் சாதியை சேர்ந்த ஒரு பையனை திருமணம் செய்தால் வெட்டிக்கொல்வதோ, மரத்துடன் கட்டி வைத்தோ எரித்துக்கொள்வார்களே அந்த உண்மையையும் இந்த கற்பனையுடன் கலந்து காட்டியிருக்கலாமே!

நாத்திகவாதி பாலா தாழ்த்தப்பட்ட மக்களை அறுவருப்பாக காட்டுவதன் பொருள் என்ன? அதாவது தாழ்த்தப்பட்ட மக்களை கேவலமாக பார்க்கும் கருப்புப்பார்ப்பனராக இருக்கிறார் பாலா. தனக்கு மேலே பார்ப்பான் இருக்கக்கூடாது. ஆனால் தனக்கு கீழ் அடிமையாக தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்க வேண்டும். மாட்டிறைச்சி உண்ணாத ஆனால் மற்ற இறைச்சிகளை உண்ணும் சாதிஇந்து மனோபாவத்தை தான் இந்த திரைப்படம் காட்டுகின்றது.

பாலாவின் முந்தைய படங்களை வைத்து பரிசீலிக்கும் போதும் பார்ப்பனீயத்தை தூக்கிப்பிடிக்கிறார். அதே நேரத்தில் நாத்திக பஞ்ச் வசனங்களையும் வைக்கிறார். சுருக்கமாக சொன்னால் அவருடைய படைப்புக்கள் அனைத்தும் “கருப்பு பார்ப்பனீயம் பகுத்தறிவு பேசுகிறது” என்றே சொல்லலாம்.

–    சிந்தியுங்கள்!

தொடர்புடைய இடுகைகள்

‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ திரைப்படமும் சமூக அவலமும்..

சிரிக்க வைக்கும் சீமானும்! சிக்கியிருக்கும் சிபிஎம் கட்சியும்!

செந்தமிழன் சீமான்.. அவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்ல, மக்களை சிரிக்க வைக்கும் நல்ல நகைச்சுவையாளரும் கூட! அதை அவரே சமீப காலங்களாக நிரூபித்து வருகிறார். நான் தமிழில் நகைச்சுவையாளர் என்று சொன்னதை நீங்கள் இங்கிலிபீசில் ‘காமெடி பீஸ்’ என்று அர்த்தப்படுத்திக் கொண்டால் அதற்கு நான் பொருப்பல்ல!

வடிவேலுவ மிஞ்சுற அளவுக்கு அப்படியென்ன காமெடி பண்ணாரு நம்ம காமெடி பீஸ் அப்படின்னு நீங்க கேட்கலாம்.

சமீபத்தில் அவர் அம்மாவுக்கு நடத்திய பாராட்டுவிழாவில் பேசிய பேச்சுதான். வீரமணி மாதிரி எதுக்கு இவர் போய் பாராட்டு விழா நடத்துராருன்னு பார்த்தா ஈழப் பிரச்சனைக்காக சட்டசபையில் தீர்மானம் போட்டதற்காக ஜெயலலிதாவிற்கு பாராட்டுவிழாவாம்.  அந்த பாராட்டுவிழால பேசின பேச்சோ காமெடியோ காமெடி.

வீர நாச்சியாரின் மறு உருவம் இந்த மாமி ஜெயலலிதாவாம் (யப்பா.. இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா சாமி ..)

8 கோடி தமிழக மக்களின் பிரதிநிதியான முதல் – அமைச்சர் ஜெயலலிதா, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கும் தீர்மானத்தை ஒரு அமைச்சரை வைத்து முன்மொழிய சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. ஈழத்தமிழர்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தின் முக்கியத்துவம் கருதி சட்டமன்றத்தில் அவரே தீர்மானத்தை முன் மொழிந்து பேசினார். துணிச்சல் மிக்க பெண்மணி அவர். தமிழர் அனைவருக்கும் அவர் புரட்சித்தலைவி ( யாரு… நான் பாப்பாத்திதான் என்று சட்டமன்றத்தில் பகிரங்கமாக சொன்னவர்.. துணிச்சல் மிக்கவர் தான்.. )”   இப்படியெல்லாம் பேசியிருக்கிறார் சீமான்.  கலக்க போவது யாரு நிகழ்ச்சியில காமெடி பண்ற மாதிரி தனியா பேசி காமெடி பண்ணியிருக்காருல்ல.  வார்த்தைகளாலே சாமரசம் வீசும் சீமான் போற வேகத்தை பார்த்தா சமூக நீதிகாத்த வீராங்கனை பட்டம் கொடுத்த மானமிகு(!) வீரமணியவே விஞ்சிடுவார் போலிருக்கிறதே!

ஒரு சந்தேகம், ஜெயலலிதாவுக்கு பாராட்டுவிழா நடத்தினது இருக்கட்டும். அந்த தீர்மானத்தை நிறைவேற்றும்போது கூட புலிகள் பற்றி அதே வெறுப்புணர்வுடன் பேசினாரே ஜெயலலிதா, இதற்கும் சேர்த்து தான் பாராட்டுவிழா நடத்தி ஜெயாவை பாராட்டினாரா சீமான்?

ஈழத்தாய்க்கு பாராட்டு விழா நடத்தியாச்சு. ஆனால் அந்த ஈழத்தாய் தமிழ்நாட்டு குழந்தைகள் குடிக்கக்கூடிய கல்விப் பாலில் பார்ப்பனீய விஷத்தை ஊற்றுகிறதே இதற்கென்ன செய்யப்போகிறார் சீமான்? பார்ப்பன பாசிச ஜெயலலிதா சமச்சீர் கல்வியை தீவிரமாக எதிர்க்கிறாரே இதற்கென்ன செய்யப்போகிறார் சீமான்? ஒரு பக்கம் பாராட்டு விழா நடத்திவிட்டு சமச்சீர் கல்வி விஷயத்தில் ஜெயலலிதாவை எப்படி எதிர்த்து கண்டனம் தெரிவிப்பது அல்லது அறிக்கை விடுவது என்று சங்கடத்தில் கையை பிசைந்து கண்டிருக்கலாம் சீமான்!

இப்படி காமெடி செய்தும் கையை பிசைந்தும் கொண்டிருக்கும் சீமான் ஒருபுறமிருக்க சிபிஎம் கட்சியோ இன்னொரு பக்கம் மக்களை கேனைகள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறது. சிபிஎம் கட்சி தன் மாணவர் அமைப்புடன் சமச்சீர்க் கல்விக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தியுள்ளது. ஆனால் சமச்சீர் கல்வியை எதிர்க்கும் பார்ப்பனீயத்தையோ பார்ப்பனீயத்தை ஆதரிக்கும் அதிமுகவையோ ஜெயலலிதாவையோ எதிர்த்து ஒரு வார்த்தைக் கூட பேச மறுக்கிறது. இவர்கள் அதிமுக கூட்டணியில் தானே இருக்கிறார்கள். ஏன் இவர்கள் தங்கள் கூட்டணி கட்சியான ஜெயாவிடம் நேரடியான எதிர்ப்பை காட்டமறுக்கிறார்கள்? ஆனால் கொல்லைப்புறமாக வந்து சமச்சீர்க் கல்விக்கு நாங்களும் ஆதரவானவர்கள் என்று மக்களுக்கு காட்டுகின்றனர். ஏன் இந்த பம்பல்? கூட்டணிக் கட்சியாச்சே என்று சங்கடமா? அல்லது எதிர்த்து பேசினால் அம்மா போயஸ்கார்டனில் கேட்டில் கூட அனுமதிக்க மாட்டார் என்னும் பயமா? இவர்கள் கம்யூனிஸ்டுகள் என்னும் பெயரில் செய்யும் பம்மாத்து மக்களுக்கு நன்றாகவே தெரிகின்றது. ஒவ்வொரு முறையும் தாங்கள் போலி கம்யூனிஸ்டுகள் என்று தங்களைத் தாங்களே நிரூபித்து காட்டுகின்றனர்.

 வீராப்பாய் பேசி இந்த போலி ஜனநாயக அரசியல் கிணற்றில் குதிக்கும் அனைவரும் தங்கள் கொள்கைகளை கோவணமாக தூக்கியெறிகிறார்கள் என்பதை தான் வரலாறு நமக்கு காட்டுகிறது.

அரசியலில் பங்கெடுக்க போறேன் தமிழ் நாட்டை தனியா பிச்சி எடுக்கப்போறேன் என்று அன்று கிளம்பிய அண்ணா, தேர்தல் அரசியலில் வந்து ஒன்னையும் பிச்சி எடுக்கல என்பது தான் உண்மை.

திமிறி எழு திருப்பி அடி என்று பத்தாண்டுகளுக்கு முன்னால் தேர்தல் அரசியலுக்கு வெளியில் நின்று பேசிய திருமா இன்று இந்த போலி ஜனநாயகத்தில் திமிறவும் முடியாமல் திருப்பி அடிக்கவும் முடியாமல் அவர் திணறுவதை மட்டும் தான் பார்க்க முடிகிறது.

இந்த வரலாற்றுப்போக்கின் நிகழ்கால நிரூபிணம் தான் ‘தம்பி சீமான்’.

மன்னிக்கவும் ‘அண்ணன் சீமான்’. மறுபடியும் மன்னிக்கவும் ‘செந்தமிழன் சீமான்’.

பகுத்தறிவாதம், பார்ப்பனீய எதிர்ப்பு, தமிழ் உணர்வு என்று பேசிய சீமான் இன்று சந்தி சிரிக்கும் காமெடி பீசாகியிருக்கிறார் என்பதை நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

வாய்க் கிழிய பேசி தொண்டைத் தண்ணி வற்றிப்போகும் அளவுக்கு பேசிய சிபிஎம் கட்சித் தலைவர்கள், அண்ணா, திருமா, சீமான் இவர்கள் ஓட்டுக்காக சமரசமாகி கடைசியில் சந்தர்ப்பவாதிகளாக மாறிப்போன கதையை பார்த்தாவது, நாம் இந்த போலி ஜனநாயக வரையறைக்குள் எதுவும் செய்ய இயலாது என்பதை உணர வேண்டும். இது தான் வரலாறு நமக்கு புகட்டும் பாடம்.

மக்கள் புரட்சியின் மூலம் தான் மக்களுக்கான விடுதலையை சாதிக்க முடியுமே தவிர இந்த மாதிரி பாராட்டு விழாக்கள் மூலமோ, கூட்டணி ஆட்சி மூலமோ சாதிக்க முடியாது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் இந்த போலி ஜனநாயகத்தின் தேர்தல் அரசியல் மூலமாக மக்கள் விடுதலையை சாத்தியப்படுத்தவே முடியாது.

-சிந்தியுங்கள்!